Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1851

R. P. ராஜநாயஹம் பற்றி பதிவுகள். காம் வ. ந. கிரிதரன்

$
0
0


 "R.P.ராஜநாயஹத்தின் எழுத்தை ஒருமுறை வாசித்தாலும் , வாசித்தவர் அதற்கு அடிமையாகிவிடுவார். இவர் புகழ் பெற்ற தமிழ் வலைப்பதிவர்களில் முக்கியமானவர்களிலொருவர். சிற்றிதழ், என்று தொடங்கி தமிழ் / உலகக் கலை, இலக்கிய உலகு பற்றி, இலக்கிய ஆளுமைகள் பற்றி, அவர்கள்தம் வாழ்வில் நடைபெற்ற பலருக்குத் தெரியாத சம்பவங்கள் பற்றியெல்லாம் , சுவையாக, நெஞ்சைக்கவரும் வகையில் கூறுவதில் வல்லவர் R.P.ராஜநாயஹம். தன் பெயரை R.P.ராஜநாயஹம் என்றுதான் எழுதுவார். ராஜநாயகம் என்று எழுதுவதில்லை. ஒருமுறை இவரது கட்டுரையைப் 'பதிவுகள்'இணைய இதழில் வெளியிட்டபோது ராஜநாயகம் என்று எழுதியபோது அதனைத்திருத்தி ராஜநாயஹம் என்று போடுமாறு  தவறினைத்திருத்தினார்.


சினிமாவில் உதவி இயக்குநராக, நிதி நிறுவனம் நடத்தியவராக, நடிகராக.. என இவர் செய்த பல்வேறு வேலைகள் காரணமாக இவரது தமிழகக் கலை, இலக்கிய அனுபவ அறிவு பரந்தபட்டது. ஆங்கில இலக்கியத்தில் மிகுந்த புலமை மிக்கவர். 


இவரது மாமனார் எம்ஜிஆர் காலத்தில் முக்கிய பிரமுகர்களிலொருவராக விளங்கியவர். அதனால் தமிழக அரசியல் பற்றிய பலருக்குத் தெரியாத தகவல்களெல்லாம் இவருக்குத் தெரிந்திருக்கின்றது.


எழுத்தாளர் அமரர்அசோகமித்திரன், சி.சு.செல்லப்பா மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர்.


'பதிவுகள்'இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் இவரது கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.


இவரது எழுத்துகள் இலக்கியச் சிறப்பு மிக்கவை அவை எழுதப்படும் எழுத்து நடையால், வெளிப்படுத்தும் இலக்கிய அறிவினால். இவரது கலை, இலக்கிய ஆளுமைகள் பற்றிய அனுபவப்பதிவுகள் இலக்கியச்சிறப்பு மிக்கவையாக விளங்கும் அதே சமயம், கலை, இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஆய்வுகளுக்கு, கலை, இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு உதவியாக விளங்கும் ஆவணப்பதிவுகளும் கூட.


இவரது எழுத்துக்கள் எல்லாம் நூலுருப்பெற வேண்டியதவசியம். ஒரு காரணம்: கலை, இலக்கிய மற்றும் ஆவணச்சிறப்பு மிக்க அவை ஆவணப்படுத்தப்பட வேண்டும். "




Viewing all articles
Browse latest Browse all 1851

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>