ஷேக்ஸ்பியர் வரிகள் இவை.
"Sleep dwell upon thine eyes,
peace in thy breast!
Would i were sleep and peace,
so sweet to rest."
- Romeo and Juliet
ரோமியோ தான் இதை சொல்கிறான்.
ஷேக்ஸ்பியர் படைப்புகள் பற்றி கொஞ்சம் கவனம் இருந்ததால் தான் ஒதல்லோ நாடகக்காட்சி ஒன்றை கண்ணதாசன் தன் சொந்த படத்தில் சேர்த்திருந்தார். 'ரத்த திலகம்'படத்திற்கு அழகூட்டிய காட்சி.
அதற்கு முன்பே 'ஆலயமணி'க்கு கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்
"தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்.."
அப்படியே ஷேக்ஸ்பியர் வரிகளின் மொழிபெயர்ப்பு.
Sleep dwell upon thine eyes,
peace in thy breast!
Would l were sleep and peace....