V. நாகையாவின் பக்கத்தில் நிற்பவர்கள் உடன்பிறப்புகள்.
S.N. சுந்தர், S.N.சுரேந்தர், S.N. ஷோபா.
(கிருஷ்ணன்) பஞ்சுவின் சகோதரர் பட்டு இயக்கத்தில் வந்த 'கண்மலர்'படத்தில் மாமா மஹாதேவன் இசையில், வாலி எழுதி
பாலமுரளி கிருஷ்ணா பாடிய "ஓதுவார், உன் பெயர் ஓதுவார்"பாடல் காட்சியில்
உடன் பிறப்புகள் குரல்களும் பாடலில் ஒலிக்கிறது. பாடலின் ஆரம்பத்தில் தேவாரம்.
கண்மலரில் இன்னொரு பாடல் ஜானகி பாடியது. அதில் துவக்கத்தில் பாலமுரளி பாடும் கேதார் கௌள ராக தொகையறா 'அம்பலத்து நடராஜா உன் பலத்தை காட்டுதற்கு என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனய்யா, உன் பதமே கதியென்று நம்பியவர் வீட்டிலே கண் மறைக்கும் விளையாட்டு ஏனய்யா?'
நான் வாய் விட்டு ரசித்து பாடும் வரிகள்.
https://youtu.be/7uzriC0UwyU?si=G-lWblkj_VrpWx9E
https://youtu.be/Jg6bZ5UWzqA?si=9Iaydu_hOpzUG15k