விஞ்ஞானி கோவை ஜி.டி நாயுடு
பேட்டியில் சொல்லியிருந்தார்.
இவர் டாய்லட் போகும்போது கவனித்திருக்கிறார். முதலில் சிறுநீர் போய் இருக்கிறது. அப்புறம் மலம் வெளியேறியிருக்கிறது.
தொடர்ந்து இதைக்கவனித்த அவருக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
சிஸ்டத்தை மாற்ற வேண்டும். ஆமா. சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று ரஜினி மாதிரியே ஜி.டி.நாயுடு அன்றே முடிவு செய்திருந்திருக்கிறார்.
அதன் படியே சிஸ்டத்தை மாற்றி தான் அதன் பிறகு he was relieving himself. மொதல்லவே two toilet போகட்டும். அப்பால தான் one toilet.
இதை அப்புறம் ஒரு டாக்டரிடம் சொல்லியிருந்திறார்.
அவர் “ ஏங்க சிஸ்டத்தை இப்படி மாத்துறீங்க. இயல்பா அத போக விட்டுடுங்க. சும்மா லூஸ்ல விடுங்க..” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
அப்புறம் தான் பழைய சிஸ்டப்படியே காலைக்கடனை முடித்து வந்தாராம்.
2019 'நக்கல்'பதிவில் (Jan 11, 2019)
ஒரு பகுதி