வேடிக்க - 10
ந. முத்துசாமி உரையாடல்களில் தெறித்தவை
வெங்கட்ரங்கம் பிள்ளை ஒட்டி பழண்டியம்மன் கோவில் தெரு - கருப்பாணியம்மன் கோவில் மீனவக்குப்பம் முத்துசாமி 1960களில் வாழ்ந்த பகுதி.
தெருவில் வீட்டு வாசலில் கருவாடு காயப்போட்டிருப்பார்கள்.
மீனவக்குப்பக்குடிகாரன் நல்ல போதையில் உயரமான மீசை முத்துசாமியை உற்றுப்பார்க்கிறான். போலீஸ் என்று இவரை நினைத்து கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான். ( இதை ரசித்து அடிக்கடி சொல்வார்.)
குப்பத்தில் இருந்தவர்கள் அவனைத் திட்டி
இவரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள்.
பாரதியார் ஜாதிக்காயை வாயில் அடக்கிக் கொள்வார். லேசான போதை இருக்கும்.
பாரதி கஞ்சா அடிப்பார்.
ஞானக்கூத்தன் அறையில் ந.முத்துசாமி கஞ்சா அடித்திருக்கிறார்.
மீனவக் குப்பம் வீட்டில் கடல் அலை தலைக்கு மேல் வந்து அடித்தது போல் கஞ்சா போதை பிரமை.
முத்துசாமி சிதம்பரம் அண்ணாமலை யுனிவர்சிட்டியில் இண்டர்மீடியட் படிக்கும் போது தாமோதரனுடன் Non Veg messல் சாப்பிட்டவர்.
மாயவரத்தில் தாய் மாமா நடராஜனுடன் மட்டன் கோலா உருண்டை சாப்பிட்டதுண்டு.
சென்னை திருவல்லிக்கேணியில் பழண்டியம்மன் கோவில் மீனவக் குப்பத்தில் இருக்கும் போது
வெங்கட்ரங்கம்பிள்ளை தெரு கார்னர்ல
முஸ்லிம் கடையில் ஆட்டுக்கால் சூப். அங்கே தீனதயாளுவுடன் சூப் சாப்பிட்டிருக்கிறார்.
பின்னாளில் முழு சைவம்.
'புலால் உண்ணாதவனை எல்லா உயிர்களும் தொழும்'குறளை பரவசமாக சொல்வார்.
Theatre memory
புள்ளி விபரம் மீசையைத் தடவிக்கொண்டே முத்துசாமி சொல்வார்.
"சம்ஸ்கிருதத்தில் மூன்று நாடகங்களுக்கு மேல் எழுதக்கூடாது என்று மரபு.
பாஸன் என்ற நாடகாசிரியர் மூன்று சம்ஸ்கிருத நாடகங்களுக்கு மேல் எழுதியுள்ளார் என்பதை கணபதி ஐயர் கண்டு பிடித்திருக்கிறார்."
2016 சிங்கப்பூர் போய் இறங்கிய போது
'ஏர்போர்ட்டில் சைனாக்காரன் தோள்ள
குழந்தைய பார்த்தவுடன் எங்க அப்பா ஞாபகம் வந்துடுச்சி. எங்க அப்பா எப்பவும் என்ன தோள்ள ஒக்கார வச்சுப்பார். எனக்கு ஏழு வயசு இருக்கச்ச அப்பா செத்துப் போயிட்டார் '
குஞ்சலி மாமி "ராஜநாயஹம், அவர் சொன்னதையே சொல்லிண்டிருப்பார்"
ராஜநாயஹத்திற்கு முத்துசாமி பேச்சு அலுத்ததேயில்லை.