Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1852

ராஜ் கௌதமன்

$
0
0

ராஜ் கௌதமன்

-1989ல் நவம்பர் மாதம் 17ம் தேதி
தி. ஜானகிராமன் நினைவாக 
புதுவை சாம்பர் ஆஃப் காமர்ஸில் நடந்த கூட்டம் நடத்திய போது நனைந்து கொண்டே வந்த ராஜ் கௌதமன் ரெயின் கோட்டுடன் அருகில் அமர்ந்தார். 

- லாஸ் பேட்டையிலிருந்து ராஜ் கௌதமன்
கடிதம் எழுதியிருந்தார்.
 'ராஜநாயஹம்,
இலக்கிய வெளி வட்டம் நடராஜன் இங்கு வரமாட்டார். அவர் சொந்த கிராமத்திலிருந்து வேறு ஊர்களுக்கு பிழைப்புக்காக போகக்கூடியவர் அல்ல.
 தன் ஊரிலேயே சவால்களை சமாளிப்பவர். இது கோணங்கியின் வழக்கமான கோணங்கித்தனங்களில் ஒன்று.'

- உள்ளூர் அறிவுலக பூர்ஷ்வாக்களை பார்க்கப் போயிருந்த போது பேராசிரியர் ராஜ் கௌதமன் அங்கு வந்தார். பேசிவிட்டு அவர் கிளம்பிய பின் பூர்ஷ்வாக்களின் reaction "இவர் எங்களுக்கு நண்பர் அல்ல. எங்க ஸ்டாண்டர்ட் கிடையாது"
சொல்ல விரும்பியதின் அர்த்தம் என்னவென்றால் " He is not worthy of our mettle"

- 1990. புதுவை நேரு ஸ்ட்ரீட். பிரபஞ்சனுடன் பேசிக்கொண்டு வரும் போது எதிரே 
ராஜ் கௌதமன். 
பிரபஞ்சன் கேட்டார் "என்ன கௌதமன், டல்லாயிருக்கீங்க"

கௌதமன் உடன் பதில் "குடி. குடி. என்னேரமும் குடிச்சிகிட்டே இருந்தா. 
இப்டி தான்.
வீடு கட்டுனதுல இருந்து நிம்மதியே போச்சி. கடன். அதான்."

- 1996. ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டை ஒட்டி கோணங்கியை தற்செயலாக பார்த்த போது தொகையொன்றை கல்குதிரைக்காக கொடுத்தேன். கையில் கிடைத்த அந்த பணம் காரணமாக 
அவன் உடனே இலக்கிய வட்டம் நடராஜனுடன் புதுவைக்கு திடீர் பயணம். 
கௌதமன் வீட்டிற்கு போய் நுழைந்த போது "ஏன்டா இப்ப இங்க வந்தீங்க? "
அவமானம்.
உடனே இருவரும் வெளியேறியிருக்கிறார்கள்.

பாலகுரு அண்ணாச்சி தான் இதை வேதனையோடு சொன்னார். நடராஜனும் கௌதமனும் பாலகுரு அண்ணாச்சியும் பால்ய காலம் தொட்டு வத்றாப் புதுப்பட்டியில் நெருங்கிய நண்பர்கள்.

- 1997. ஆண்டாள் சன்னதியில் திருப்பாவை உற்சவம்.
சேஷகோபாலன் "ராஜ ராஜ ராதிதே"பாடிக்கொண்டிருந்தார். 
ஹரிகேஷ நல்லூர் முத்தையா பாகவதரின் கீர்த்தனை. 
இந்த நிரோஷ்டா ராகம் பாடும்போது உதடுகள் இரண்டும் ஒட்டவே ஒட்டாது. பாட்டு முடிந்ததும் வலது பக்கம் உட்கார்ந்திருத்த வத்றாப் புதுப்பட்டி நாயக்கர் இசை சுகம் பற்றி என்னிடம் சிலாகித்த போது நான் கேட்டேன் .
"உங்க ஊரிலே நடராஜன் அண்ணாச்சி தெரியுமா? "
அவர் "எந்த நடராஜன்"
"நாங்க இலக்கிய வெளி வட்டம் நடராஜன் என்று சொல்வோம் . இலக்கிய வெளி வட்டம்னு அந்த காலத்திலே நல்ல இலக்கியப் பத்திரிகை நடத்தினார். பிள்ளைமார் ஆளு.( ஜாதியை சொன்னால் தான் அந்தப் பக்கமெல்லாம் அடையாளமும் தெரிய வாய்ப்பு.)
உங்க ஊர் பாலகுரு அண்ணாச்சி, அப்புறம் ராஜ் கௌதமன் இப்போ புதுவையிலே பேராசிரியர் ஆக இருக்கார் . இவங்கல்லாம் எனக்கு  பழக்கம்."என்றேன்.
"அந்த நடராஜன் கம்யூனிஸ்ட் ஆச்சே. naxalite ஆச்சே.
அவரா உங்களுக்கு நண்பர்"
புதுப்பட்டி நாயக்கர் பதறி விட்டார்.

Viewing all articles
Browse latest Browse all 1852

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>