எலியா கஸன் இயக்கி மார்லன் பிராண்டோ நடித்த ’ஆன் த வாட்டர்ஃப்ரண்ட்’ படத்தில் தொந்தரவான வில்லனாக நடித்திருந்த லீ ஜே .காப் பெயர் ஃப்ரண்ட்லி. Friendly!
கமல் ஹாசனின் ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வில்லன் பெயர் சினேகன்.
குள்ள சினேகன்.
வில்லிகள் காயத்திரி, ஆர்த்தி, ஜூலி.
ஓலப் பாயில நாய் மோண்ட மாதிரி தொண தொணத்த கஞ்சா கருப்பு.
பரணி தான் பாவப்பட்ட ஜீவன்.
…………………………………….
ஓலப் பாயில நாய் மோண்ட மாதிரி தொண தொணத்த கஞ்சா கருப்பு.
பரணி தான் பாவப்பட்ட ஜீவன்.
…………………………………….
அல்லயன்ஸ் ஃப்ரான்சைசில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் பொற்கொடியை சந்தித்தேன். பெசண்ட் நகர் ஸ்பேஸஸில் அகமெம்னான் நாடகத்தில் க்ளிட்டெம்னெஸ்ட்ரா பாத்திரத்தில் இந்த பொற்கொடி நடிக்க பார்த்திருக்கிறேன். அவருடைய அப்பா பெயர் பாலறாவாயன் என்றார். பாலறாவாயன் என்ற பெயர் நான் நிஜமாகவே இதுவரை கேள்விப்படாதது.
இளிச்சவாயன், ஓட்டவாயன், வாய் பொளந்தான் பலரைத் தெரியும்.
ஞானப்பால் குடித்த திருஞானசம்பந்தர் பெயர் பாலறாவாயன்!
பொற்கொடியின் குடும்பமே சைவ சித்தாந்த ஈடுபாடு கொண்டது.
அப்பா பாலறாவாயன் லொயோலா கல்லூரியில் தமிழ் பேராசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் உபன்யாசம், வியாக்யானம் செய்வாராம்.
………………………
http://rprajanayahem.blogspot.in/2012/06/blog-post.html
http://rprajanayahem.blogspot.in/…/on-waterfront-1954movie.…