தென்காசி கோயில் காற்று கொட்டுகிற வாசலில் மூன்று பெரியவர்கள். அவர்களின் சுவாரசிய உரையாடலில், திண்ணைப்பேச்சு வீரம் சொட்ட, சொட்ட சிந்தித்தெறித்தது. காதுக்குள் சாரல்.( Eavesdropping என்பதை நயமாய் சொல்கிறேன்.) ஒரு பெரிய நடிகரின் அந்திம காலத்தில் பிரபல நடிகை பார்க்கப் போனாராம். நோய்ப்படுக்கையில் இருந்த அவரைப்பார்த்து சம்பிரதாய கண் கலங்கல், 'எப்டிருந்தீங்கண்ணே'புலம்பல் முடித்து விட்டு 'உங்களுக்கு ரொம்ப பிடிக்குமேன்னு கொண்டாந்தேன்'ன்னு ஒரு பலகாரத்தை அவருக்கு ஊட்டி விடும் போது வேலை பார்க்கும் பெண் வந்து அதை தட்டி விட்டுவிட்டு, நடிகையைப்பார்த்து கூப்பாடு போட்டாளாம்.'ஏம்மா, வந்தியா பாத்தியா போனியான்னு இல்லாம இப்டி செய்ற. ஏம்மா.. ஒடனே அது வெளிய வந்துடும்மா. நான்ல ஒர் நாளக்கி பத்து தடவ பேண்டத வழிச்சுப்போட்டு நசநசன்னு குண்டிய கழுவ வேண்டியிருக்கு. ஏம்மா தாலியறுக்ற'
↧