அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது "மரத்தடி மகாராஜாக்கள்"என்ற நூலை நான் எடிட் செய்து வெளியிட்ட போது அதில் இடம்பெற்ற என் வசன கவிதை.
தற்காலத்தின் கொந்தளிப்பு மிக்க நிகழ்ச்சிகளோ, துரித தொழில் நுட்ப முன்னேற்றமோ,சுருங்கக்கூறினால் ,எதுவுமே “ நான் உன்னை காதலிக்கிறேன்” என்ற வார்த்தையின் இனிமையைக் குறைத்து விடமுடியாது.
என் அழகு நளினமே!
பருவ உணர்ச்சிகள் சாதாரணமானவையல்ல
இளம் உள்ளங்கள் அதற்கு ஆட்படுவது சர்வ சாதாரணம்.
ஆனால்,
அவற்றிற்கு அணை போட்டும் பெருக்கெடுக்கும்
வெள்ளமாக பாய்கின்ற நிலையை விவரிக்க
அந்தக் கம்பனால் கூட முடியாது.
( கம்பனை வம்புக்கிழுக்காத எழுத்தாளன் கிடையாது.)
உன் பார்வை
வக்கரித்துப்போன என் நினைவு மேகங்களை குளிர்விக்கின்றது.
உன் புன்னகை
குளிர்ந்த நினைவு மேகங்களை தடுத்து
தொடர்மழையாக பொழியச் செய்யும் தொடர்மலையாகின்றது..
இதை இந்த அணை உடைந்து விட்டது.
எண்ண அலைகள் மனதைப் படாத பாடு படுத்துகின்றன.
எந்நேரமும் ஒரு சலசலப்பு, அலைக்கழிப்பு
துன்பமயமான சூனிய உணர்வு
நெஞ்சின் ஆழத்தில் இன்பம் கலந்த வேதனை
துவக்க காலத்திலெல்லாம், மனதில்
உன்னைப் பற்றி ஏற்படும் இனிய நினைவுகளை,
மிகச்சாதாரணமாக, அலட்சியமாக
Infatuation என்று புறக்கணித்த உள்ளம்
Teenage love cannot be a successful one – தட்டிக்கழித்த நாட்கள்..
இருபதைத்தாண்டும் இந்தக் கணத்தில்
உன்னைப் பற்றிய நினைவு விஸ்வரூபம் எடுக்கும்போது
என் நிலையை என்னால் விவரிக்க முடியவில்லை.
உன்னை தினம் காலையிலும் காலையிலும் மாலையிலும்
தரிசனம் செய்யும் அந்த நாட்களில்
என்னிடம் ஒருத்தி வலிய வந்தாள்
நானும் ஒதுக்கவில்லை.
விளயாட்டாகவே நினைத்தேன்
அங்கே போவோம்; இங்கே போவோம் என்றாள்.
தட்டிக்கழிக்கவில்லை.
“ உன் பேனா சோம்பேறியா?” என்றாள்.
உடனே என் பேனா பொறிந்து தள்ளியது.
“ If you say good-bye, may be I would die” என்றாள்.
நான் Good-bye சொல்லிவிட்டேன்.
அவள் இன்னொருவனுடன் சுற்ற ஆரம்பித்து விட்டாள்!
இதோ,
முதல்முறையாக வாழ்வில் ஒரு ஜீவன் காதல் வயப்படுகிறது.
பெண்ணை பூஜிக்கிறது.
சிந்தனை – அதுவும் மிகத்தூய்மை.
உண்மையை அப்பட்டமாக எழுத
எனக்கு சிறிது வெட்கமாகக் கூட இருக்கிறது.
தீய சிந்தனைகள் கூட
உன்னை நான் நினைத்த அளவில் விலகி விடுகிறது.
“என்ன இது, பட்டமரத்திலே பால் வடிகிறது!”
சொல்லப்போனால் வேறெந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப்
பார்க்க கூட மனம் கூசுகின்றது.
சீ! இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம்.
இதெற்கெல்லாம் காரணம் ?
எனக்கு உன் மேல் ஏற்பட்டிருக்கும்
இந்த சுந்தர உணர்வுகளுக்கு காரணம் ?
நான் இளைஞன், நீ யுவதி
நான் இருபது – நீ பதினேழு என்பது மட்டுமல்ல
விட்டில் பூச்சிக்கு இயற்கையாக நெருப்புச்சுடரிடம் ஏற்படும்
ஈர்ப்பு இது என்று
என்னை நானே ஏமாற்றிய காலம் மலையேறி விட்டது.
பாலுணர்ச்சி மட்டுமல்ல
இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட
ஏதோ ஒரு தெய்வீக உணர்வு
(எனக்கு மத நம்பிக்கை கிடையாது. கடவுள் நம்பிக்கை உண்டா ? தெரியாது. Agnostic! )
‘காவன்னா’ ‘தானா’ ‘ல்லன்னா’ வியாக்கியானம்
நான் சந்தேகிக்கிறேன்.
எனக்கு உன்பால் ஏற்பட்டிருப்பது அது தானோ?
சினிமா பார்க்கும்போது கூட
வில்லனையே ரசித்துப் பழக்கப்பட்ட நானா இப்படி எழுதுகிறேன்.
உன்னை நெருங்கும் இந்த நேரத்தில்
நான் ஒரு விஷயம் கவனித்தேன்.
உன்னை
நான்கைந்து கழுகுகள் வட்டமிடுகின்றன.
இது குறித்து, உள்ளபடியே
உன் மேல் உள்ள அக்கறையால் மனம் துடிக்கிறது.
( ஐயோ, இந்த ஆறாவது கழுகுக்கு என்ன கரிசனை! )
உன் மேல் எனக்கு ஒரு அபாரமான நம்பிக்கை.
நீ கெட்டுப் போக கூடியவளல்ல.
அருந்ததி நட்சத்திரத்திற்கு சமானம்.
Acumen!
நாம் இருவரும் பிறந்த வீட்டுக்கு செய்ய வேண்டிய
நன்றிக்கடன்கள் ஏராளம்!
அப்படியல்ல, நாம் இருவரும் இணைந்து தான் ஆக வேண்டுமென்றால்
உன் பாஷையில் சொன்னால்
“கடவுள் சேர்த்து வைப்பார்”
என் பாஷையில் சொன்னால்
“ கடவுள் இருந்தால் கட்டாயம் சேர்த்து வைப்பார்”
“ Oh, my Love!
If it is possible, pass from me;
Nevertheless, not as my will,
But as thy god’s will”
என் எண்ணமெல்லாம்,
என் கண் உன்னை இனி
என்றும் பார்க்கவே கூடாது என்பதே.
என் காலம் உள்ளவரை
உன் நினைவு
என் கண்ணில்
கசிந்து கொண்டே இருக்கும்.
................................
http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_2256.html
http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_22.html
http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_2256.html
http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_22.html