பிறப்பையும் இறப்பையும் பார்த்திருக்கிறேன். இரண்டுமே வேறானவை என்றே நினைத்தேன் என குழம்பினார் டி. எஸ். எலியட்.
ஷோப்பன் ஹீர் தரும் தத்துவ விளக்கம்
- 'பிறப்புக்கு முன்னதாக நீ என்னவாக இருந்தாயோ, அதுவாகவே சாவுக்குப் பின்னும் ஆகி விடுவாய்'
All living things faces the birth and death cycle.
பிறப்பு என்பது பிறப்பவன் அறியாமல் நிகழ்வது.
சாவு சிலருக்கு தெரிந்தும், சிலருக்கு தெரியாமலும், சிலருக்கு எதிர் பாராமலும் நேர்கிறது.
பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வேடிக்கையில் நடப்பவை.
Contacts, feelings, actions, reactions.
Between birth and death - A short visit to a departmental store?!
இடைப்பட்டு நடப்பவை மொத்தமும் கனவு?
ஆத்மார்த்தி, கயல் இருவரும் எழுதியுள்ள கவிதைகள் கீழே
'அலைய ஒரு காடு
தொலைய ஒரு தூரம்
புதையச் சிறு குழி
உறங்க ஒரு மேடு
கலையச் சில கனா
புணர ஒரு மேனி
போக்கச் சில பொழுது
போற்ற ஒரு தெய்வம்
போக ஒரு நாள்
கரைய ஒரு நதி
சாலச்சுகம்'
- ஆத்மார்த்தி
'இலை மறுத்துப் பூக்களாலான மரம்.
முதுகயம் மூழ்கடிக்கா நாணல்.
உடலே அகலாக்கும் மினுக்குப்பூச்சி.
பூவமர்ந்து கள்ளுண்ணும் தேன்சிட்டு.
அந்துப் பூச்சி முட்டையிடத் தளிர்கள்.
பிழைகள் பொருட்படுத்தா மூப்பு.
யாவும் நிகழ் சாத்தியமுள்ளதெனில்
எனக்கருளக் கடவது
குற்றவுணர்வுக் குறிப்புகளற்ற மரணம்.'
- கயல்
....