Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

பேராசிரியர் க. அன்பழகன்

$
0
0


கட்சியில் ஈ. வி. கே சம்பத் போர்க்கொடி தூக்கிய போது 'உனக்காவது சொத்து சுகம் இருக்கு, சம்பத். எங்களுக்கு என்ன இருக்கு? ' 

- இப்படி கேட்டவர். 


ஸ்தாபக தலைவர் மறைந்த பின் அவருடைய மருகல் 'என்னை விட வயதில் குறைந்த கருணாநிதியை எப்படி தலைவனாக நான் ஏற்பது?' 


எம். ஜி. ஆர் கட்சியில் கலகம் விளைவித்த போது அன்பழகன் 

'தி. மு. க என்ற பூமாலையில் ரோஜாப்பூ

 எம். ஜி.ஆர் தான் '


ஆனால் அதன் பின்னர் எப்போதுமே கருணாநிதியோடு நீங்காது நிலையாக மாறாமல் நின்றவர் அன்பழகன். 


கருணாநிதியை தலைவராக ஏற்றால் 

என் பொண்டாட்டி கூட மதிக்க மாட்டாளே என்று குழம்பியவர், எம். ஜி.ஆர் கணக்கு கேட்டதற்கு காட்டிய ஆவேசம். 

'என்ன கணக்கு? என் பொண்டாட்டி கூட என்னிடம் கணக்கு கேட்டதில்லை. நீ என்ன கேட்பது? 

இனி வேட்டிய அவுத்து தான் காட்டணும் '


'இரண்டு கதாநாயகர்கள், ஒரு கதாநாயகி, துப்பாக்கி வெடிக்கவில்லை. இதில் என்ன புரட்சி? '

அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த 

எம். ஜி. ஆரை கேட்டார். அவர் மீது செருப்பு வீசப்பட்டது.

'சட்ட சபை செத்து விட்டது 'என்று சொல்லி விட்டு          எம். ஜி.ஆர் வெளிறிய முகத்துடன் வெளியேறினார். 


எம். ஜி. ஆரை கடுமையாக சாடிய மற்றவர்கள் தான் கருணாநிதி முதுகில் குத்தி விட்டு 

எம். ஜி.ஆர் பின்னால் போய்ச் சேர்ந்தார்கள். 


கட்சியில் முரசொலி மாறன் பெரும் சக்தி படைத்தவராக, தலைவரின் நிழல் என்பது போக, நிழல் தலைவராக நின்ற போதும் அன்பழகன் கௌரவம் கருதி ரோஷப்பட்டதேயில்லை. 


ஒருவித VRS மன நிலையில் அன்பழகன் தி. மு. க வில் இருக்கிறார் என்று கூட கிண்டல் செய்யப்பட்டிருக்கிறார். மனிதர் அசைந்து விடவில்லை. 


அவருடைய இரண்டாவது திருமணம் பற்றி

 சர்ச்சை எழுந்ததுண்டு. 


எம். ஜி. ஆரை மக்கள் 'வாத்தியார்'என்றார்கள். 

போல, அன்பழகனுக்கு தி. மு. க வினர் 'பேராசிரியர்'பட்டம் கொடுத்தார்கள். 


ஜெயலலிதா சென்ற முறை சட்ட சபையில் இவருக்கான

'பேராசிரியர் 'பட்டத்தை இகழ்ந்து

'ட்யூட்டராக இருந்தார்'என ஏளனமாக ஏகடியம் பேசிய போது 

அன்பழகன் பதிலடி "அன்று யாரெல்லாம்

 என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று ஆராய்ந்து பார்க்கலாமா? "


தளபதி ஸ்டாலின் - மாவீரன் அழகிரி 

கலக காட்சிகளிலும் 

மிகு‌ந்த ஜாக்கிரதையாக இயங்கியவர். 


அவருடைய மேடைப்பேச்சில் எப்போதும் தனித்தன்மை இருந்தது.


..


Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>