Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

ஏசு சாமியும் செவெத்தியானும்

$
0
0

 பின் நவீனத்துவம் பற்றிய ஒரு கருத்தரங்கம்                   சென்னை லயோலா கல்லூரியில் 

பல வருடங்களுக்கு முன் நடந்தபோது அங்கே எழுத்தாளர் குமார செல்வா சொன்ன நிஜ நிகழ்வு.             ''ஏசு நாதர் கெட்ட வார்த்தை பேசினார்" 


திருச்சி ஆர். சி ஸ்கூல் கேம்பஸில் உள்ள 

தமிழ் இலக்கிய கழகத்தில் என் நண்பர் ஆங்கிலப் பேராசிரியர் நோயல் ஜோசப் இருதயராஜ்

 இதை ரொம்ப ரசித்து சொன்னார். 

அந்த ஒற்றை வாக்கியம் "ஏசுநாதர் கெட்டவார்த்தை பேசினார்" 


இங்கே காட்சியாய். 

ராஜநாயஹம் புனைவு வரைவில்

 காட்சியாக 


பாஸ்கா பண்டிகை.

நாடகம் பாஸ்கா பண்டிகையில்

 இரவு பூரா நடக்கும்.


ஏசு சாமியை சிலுவை சுமந்து செல்லும்போது நாலு பேர் சாட்டையால் அடிக்கிற காட்சி.


 ஏசு வாக நடிக்கிறவர் மிக உருக்கமாக சிலுவை சுமந்து வரும்போது யூத சிப்பாய்கள் அவரை அடித்துக்கொண்டே வருவார்கள்.


 "தேவ மைந்தன் போகின்றார் "என்று பாடல் பின்னணியில்.

 சாட்டையால் அடிக்கிற செவெத்தியான்( செபஸ்தியான் ) அந்த ரோலை கெஞ்சிக்கேட்டு வாங்கியிருக்கிறான். 

எப்படியோ இந்த நாடகத்தில் ஒரு ரோல் செய்துடனும்னு அவன் ஆசைப்பட்டது தான். 


இவன் சிப்பாயாக வந்து சாட்டையால் அடிக்கிற மாதிரி சும்மா பாவலா செய்யணும். 

அப்படி முதல்ல அடிக்கிற மாதிரி பாவலா  தான் அவனும் மற்ற மூணு சிப்பாய்களாக நடித்த ஆளுங்க போல செய்திருக்கிறான்.


ஆனா அவன் ஊர்க்காரன் ஒருத்தன் "ஏலே, 

அங்க பாருலே நம்ம செமத்தியான!"என்று கூப்பாடு போட்டது

 நடிக்கிறவன் காதிலே விழுந்தது.


 இன்னொருத்தன் "எங்கலே? எங்க ?''என்று கேட்கிறான்.


"ஏலே செத்த மூதி. அன்னா பாருலே. ஏசுவை சாட்டையால் அடிக்கிறான் பாருலே."


''எவம்லே? நாலு பேருல்லே அடிக்கான்''


"ஏலே, பச்சை டிரஸ் போட்ட சிப்பாய்

 நம்ம செவெத்தியான்லே!"

Recognition!


"சாட்டை எடுத்தார் யூதரெல்லாம்......

தாவியடித்தார் மேனியிலே ..."பின்னணியில் பாட்டு ...


செவத்தியானுக்கு நடிப்பு இயல்பா, யதார்த்தமா இருக்கணும் என்ற அக்கறை அதிகமாகி விட்டது.


 ஏசு வேசம் போட்ட ஆளை நோக்கி சாட்டையை பலமாய் வீச ஆரம்பித்தான்.

 ஏசுவாக நடித்த ஆள் மூஞ்சி உருக்கம் சோக பாவம் எல்லாம் மறைந்து வெளிறிப்போனது. 


செவெத்தியானோவெனில் 

தன் இயல்பான நடிப்பை காட்டுவதிலேயே தீவிரமாக தவ்வி தவ்வி  இயங்க ஆரம்பித்தான். 


ஏசு "ஏலே நாரபுண்டழுத. வலிக்குதுலே "


செவெத்தியான் யதார்த்த  நடிப்பின் உச்சத்தை எட்டிக்கொண்டிருந்தான்.  

ஏசு மற்ற சிப்பாய்களை நோக்கி "ஏலே, 

நிசமாவே அடிக்காம்லே.'' 


செவத்தியானிடம் திரும்பி ஏசு  

"ஈனப்புண்டழுதை. 

ஒன்னை கொன்னுருவம்லே. சவத்துக்கூதி...வலிக்குதுல்லே.

ஒக்காபுண்ட.. நிறுத்துறியா இல்லையாலே..


..


Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>