எஸ். ஜி. கிட்டப்பா யாரையும் குறிப்பிட்டு
குருவாய் சொல்ல முடியாதவர்.
"ஏக சந்த கிராஹி "என்று அந்த காலத்தில் சொல்வார்கள்.
ரொம்ப ஆச்சரியம்.
தியாகராஜரின் சுத்த சீமந்தினி ராக "ஜானகி ரமணா "கீர்த்தனையை ஒரே தரம் கேட்டு விட்டு உடனே மேடையில் பாடியவர் கிட்டப்பா.
தேவாம்ருத வர்ஷினி ராகம் மழையை வருவிக்கும் என்பது ஐதீகம். இந்த ராகத்தை நாத சிந்தாமணி என்றும் சொல்வதுண்டு.
"எவரனி "தேவாம்ருத வர்ஷினி ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் ஒரு ரிக்கார்டிங் கம்பெனிக்காக பாடி பதிவாகியிருந்த சூழலில், அப்போது இளைஞனாயிருந்த கிட்டப்பா பாடி அதே எவரனியின் மற்றொரு பதிவைக் கேட்ட பின், கிட்டப்பாவின் பாட்டில் சொக்கிப்போய், தான் பாடிய பதிவை கேன்சல் செய்து பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார் ஹரிகேச நல்லூர்.
'கிட்டப்பா பாடியது தான் எவரனி'
- மிகப் பெருந்தன்மையோடு பூரித்துப் போய் சொன்னாராம்.
எழுத்தாளர் சிவசங்கரியின் தாத்தா ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர்.