Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

R. P. ராஜநாயஹம் நடிப்பு

$
0
0

 Murugan RD 


R. P. ராஜநாயஹம் நடிப்பு 


"உங்க சேனல்ல சில வீடியோ பார்த்தேன் சார்


என்ன சொல்றது எப்படி சொல்றதுன்னே தெரியல.


உங்க எழுத்து தான் காட்சிகளை கண்முன் விரியவைக்கிற அளவுக்கு இயல்பா இருக்குன்னா ஸ்டேஜ்ல உங்க கதை சொல்ற எளிமையும், நடித்துகாட்டும் லாவகமும் கொஞ்சம நேரம் அப்படியே உறைய வச்சிடிச்சி.


எப்படி இப்படி ஒரு அசாத்திய ஆற்றல் பெற்றவரை அதுவும் திரைஉலக தொடர்பில் இருந்தவரை நம் தமிழ் திரைஉலகம் பயன்படுத்திக் கொள்ளவில்லைன்னு மனசுக்குள்ள ரொம்ப நேரம் கேள்வி குடைந்துகிட்டேயிருந்திச்சி.


ஒரு முறை கூத்துப்பட்டறை முத்துசாமி சார் அவர்களிடம் பேட்டி ஒன்று ஏதோ ஒரு புத்தகத்தில் எடுக்கப்பட்டது. அப்போது கேரளாவின் கலாபவனுடன் ஒப்பிட்டு ஒரு கேள்வி கேடடிருந்தார்கள். கலாபவன்ல இருந்து கேரளா சினிமா உலகிற்கு ஏகப்பட்ட நடிகர்கள் வருகிறார்கள். ஆனால் கூத்துப்பட்டறையிலிருந்து ஒன்றிரண்டு பேரை தவிர வேறுயாரும் வரவில்லையே என்று, 


அதற்கு சார் சொன்ன பதில் முழுவதும் ஞாபகமில்லை. ஆனால் அதில் இடம்பெற்ற ஒரே ஒரு வரி மட்டும் இன்னும் ஞாபகம் இருக்கு. திரைபடங்களில் நடிப்பதற்கு  நடிகர்களை தயார் செய்வது கூத்துப்பட்டறையின் வேலை இல்லை, எங்கள் கலையும், நோக்கமும் வேறு,,,, என்பதாக இருக்கும்.


நீங்க சில வருடங்கள் அங்கு பணியாற்றியிருக்கீங்க. உங்களை போன்ற திறமைசாலிகளை திரைபடங்களில் இடம்பெறும் நடிகர்களுக்கு நடிப்பு சொல்லிதர பயன்படுத்தியிருக்கலாம் திரைஉலகம். ஏன்னா இங்க பலவருசமாவே திரைஉலக வாரிசு நடிகர்கள், அவர்களின் நண்பர்கள், தெரிந்தவர்கள்னு அனுபவம் இல்லாதவர்களே நடிக்க வருகின்றனர். நடிப்பே வராதா (அவர்களை சொல்லியும் குற்றமில்லை) அவர்களின் முகங்களை பார்த்து பார்த்து தான் தமிழ்சினிமா சற்ற போரடித்துவிட்டதோன்னு தோணுது. அவர்களுக்கு உங்களை போன்றவர்களின் வழிகாட்டுதல் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


மேடையில் ஒரு கேரக்டர் காலை சாய்த்து நடப்பான் என்று கூறிக்கொண்டே அடுத்த மைக்ரோ நொடியில் அந்த கொணஷ்டையான நடையை சில அடிகள் நடந்துகாட்டினப்ப அசந்துட்டேன். வழக்கமாக இத பண்றவங்க இப்படி நடக்குறதுக்கு முன்ன கொஞ்சம் பிரிபரேசன் பண்ணிக்குவாங்க. மைக்க கீழ இறக்கி ம்க்கும் னு தொண்டை செறுமிகிட்டு, தோள குலுக்கிக்கிட்டு அப்புறம்தான் செய்ய ஆரம்பிப்பாங்க. அதுவும் கூட ஒரிஜினலா அப்படி நடக்குறங்க பாணியில பாதிகூட தேறாது.


அப்புறம் இன்னொன்னு


இறந்து போன பத்துவயது பிள்ளைய தோள்ல இடுப்புல தூக்கிவச்சிகிட்டு ஒரு தாய்  சோகத்த வெளிக்காட்டாம எப்படி கொண்டு வந்தாள்ங்கிறதயும் பஸ் நிறுத்தம் வந்தவுடன் உடலை இறக்கவிட்டு அவள் அழுததயும் நீங்க சொல்லிய விதம் ரொம்பும் திக்பிரமை அடைய வச்சிடிச்சி. பஸ்ல இருந்தவர்கள் ரியாக்சனை கூட நீங்க சொன்னவிதமும், அதற்கு பயன்படுத்திய வார்த்தைகளும் காட்சியின் சோகத்தை கண்முன் உணர்த்தியது போல இருந்திச்சி.


இவ்வளவு பெரிய கமண்ட் போட்டும் நான் உணர்ந்த அனுபவத்தை சொல்லவந்த விசயத்தை முழுவதுமா சொல்லிட்டேனாங்கிற சந்தேகம் கூட எனக்கே இப்ப வருது. 

இன்னும் எவ்வளவோ எழுதலாம். நேரம்தான் கிடைக்கணும்.


பிரமிப்புடன் பாராட்டுகள் சார்."


Murugan RD 


...


https://m.youtube.com/watch?v=ZeyhjwKbVB8&feature=youtu.be


https://m.youtube.com/watch?v=WDeFsRKAJMo&feature=youtu.be


https://youtu.be/dYiA2ND7vVs


https://youtu.be/acyQqteM99Y


Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>