எங்க தாத்தா வீட்டில்
அப்பா ஒரு நாய் வளர்த்தார். பெயர் ஜிம்மி.
அப்பா காரைக்காலில் உத்யோகம் காரணமாக காரைக்காலில். மாதம் ஒரு முறை தான் வரமுடியும்.
நான் செய்துங்க நல்லூரில் பிறக்கிறேன்.
வீட்டின் அருகே ரயில்வே ஸ்டேஷன்.
அந்த நாய் ஜிம்மி ரயில் சத்தம் கேட்கும் போதெல்லாம் ஸ்டேஷனுக்கு ஓடி ரயில் நிற்கும்போது அப்பாவை தேடும்.
நான் பிறந்த சமயம் அப்பாவால் உடனடியாக
வர முடியவில்லை.
ஜிம்மிக்கு நான் பிறந்தவுடன் பரபரப்பு கூடிப் போனது. அப்பா எப்படியும் குழந்தையைப் பார்க்க சீக்கிரம் வந்து தானே ஆக வேண்டும்.
சில நாட்களில் அப்பா வருகிறார்.
ஸ்டேஷனில் இருந்து அப்பாவுடன் ஜிம்மி.
Gratitude was a disease suffered by Jimmy.
குழந்தை தொர முகத்தைப் பார்க்கும் போது கூட
ஜிம்மி 'என்னைப் பார்'என்று தான் தவித்திருக்கிறது.
அந்த ஜிம்மி மீது அப்பாவிற்கு கொள்ளைப் பாசம்.
பின்னாளில் ஜிம்மி திடீரென சில நாட்களுக்கு சாப்பிடாமல் இருந்து உயிர் விட்டது.
அப்பா மனதை ஜிம்மியின் மரணம் கடுமையாக பாதித்திருக்கிறது.
அதன் பின் அவர் நாய் வளர்க்கவில்லை.
முப்பது வருடங்களுக்குப் பிறகு தான் நாய்க்குட்டி எங்கள் வீட்டிற்கு வர முடிந்தது.
கடைசி காலத்திலும் அன்பான நாய் ஒன்று அவரோடு இருந்திருக்கிறது.
இப்போது எங்கள் வீட்டில் நேற்று செல்லப்பறவை
Cockatiel - Australian bird - பெயர் குக்கு - பால்கனி வழியாக தவறி விழுந்து காணாமல் போய் விட்டது.
என் மகன் அஷ்வத் மிகுந்த ஆர்வத்துடன் இது மாதிரி வீட்டில் வைத்து வளர்க்க ரொம்ப ஆசைப்படுவான்.
என்னோடும் நன்கு பழகிய கிளி அது.
ஆறு மாதம் எங்களோடு இருந்த pet.
பேத்தி பூக்குட்டி 'குக்கு, குக்கு, குக்கு' - சத்தமாய் கூப்பிட்டும் வரவில்லை.
வெளியே விழுந்தவுடன், உடனே, உடனே காக்காய் தூக்கிப் போயிருக்கும்.
..