ஹிண்டு பார்க்கும் போது ஆபிச்சுவரி எப்போதுமே கவனிப்பேன்.
1992ல Hindu Obituary column பார்த்து இந்திரா மாமி மறைந்த விஷயம் தற்செயலாக
தெரிய வந்தது.
இந்திரா பார்த்தசாரதியின் மனைவி.
1999ம் ஆண்டு ஹிண்டு ஆபிச்சுவரியில் தான் நடிகை சந்திர கலா மரணம் பற்றி பார்த்தேன்.
அந்த இரங்கலில் இன்னொரு செய்தி தெரிந்தது. சந்திர கலா முஸ்லிமாக மதம் மாறி வாழ்ந்தவர். அந்த முஸ்லிம் பெயர் அதில் இருந்தது.
பிராப்தம் எல் ஆர் ஈஸ்வரி பாடல் 'இது மார்கழி மாதம், முன் பனி காலம், கண்ண மயக்குது மோகம், ஏன் நடுங்குது தேகம் 'சந்திர கலா.
'வசந்தத்தில் ஓர் நாள், மணவறை ஓரம்,
வைதேகி காத்திருந்தாளாம் '
மூன்று தெய்வங்கள்
'முள்ளில்லா ரோஜா, முத்தான பொன்னூஞ்சல் கண்டேன் 'அதே படத்தில் சிவகுமாருடன்.
எம். ஜி. ஆருடன் 'தங்கத்தோணியிலே
தவழும் பெண்ணழகே'
புகுந்த வீடு ஏ. எம். ராஜா, ஜிக்கி
'செந்தாமரையே, செந்தேன் இதழே'
சந்திர கலா வீடும்,
இயக்குநர் புட்டன்னா வீடும்
சென்னையில்
அடுத்தடுத்து இருந்து,
முன்னே நான் பார்த்த நினைவு.
நாற்பது வருடங்களுக்கு மேலாக பழகிய ஒருவன் கெட்டவன், சேடிஸ்ட் என்பதை அறிய வந்த போது அதிர்ந்து போனேன். எத்தனை விசித்திரம் இது? நண்பனாக நினைத்துக் கொண்டிருந்த ஒருவன் குணத்தை கண்டு பிடிக்க இவ்வளவு காலம்.
அவன் செத்துப் போய்விட்டான் என்பதைக் கூட ஹிண்டு ஆபிச்சுவரியில் தான் தற்செயலாக பார்த்துத் தெரிந்து கொண்டேன்.
..