ஆதன் டிவி மேலாளர் சக்தி சரவணன் காலையில் செல் பேசினார்.
"அரசியல் பிழைத்தோர் "படித்திருக்கிறார்.
அவருக்கு R. P. ராஜநாயஹம் நூல்
ரொம்ப பிடித்திருக்கிறது.
மிக முக்கியமானதாக அபிப்ராயம் தெரிவித்தார்.
உற்சாகமான மனிதர். இவரிடம் உள்ள sence of Humour வித்தியாசமானது.
சமீபத்தில் பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்து மறு பிறவி எடுத்திருக்கிறார்.
Resurrection.
அப்படி இருபத்தைந்து நாட்கள் படுக்கும்படியான நிலையில் தான் 'அரசியல் பிழைத்தோர்'புத்தகத்தை கையில் எடுத்திருந்திருக்கிறார்.
சக்தி சரவணன், என் மீது மதிப்பும் அன்பும் கொண்ட கருணாகரன் கார்த்திகேயன் இருவரையும்
ஆதன் டிவியில் சென்ற வருடம் சந்தித்தேன்.
ஆதன் டிவியில் தியாகராஜ பாகவதர் பற்றி
நான் பேசிய வீடியோ
பலரும் பார்த்திருக்கிறார்கள்.
https://youtu.be/5yr52veB_EI