சந்திரபாபு பற்றி நான் 2013ல் எழுதிய கட்டுரையில் ஹிண்டு ரங்கராஜன் நேரடியாக சொன்ன நூறு ரூபாய் விஷயத்தை குறிப்பிட்டிருந்தேன். அவர் சொல்லும் போது
நான் கேட்ட விஷயம். எந்த பத்திரிக்கையிலும் இதை அவர் சொல்லவில்லை.
என் பதிவு லிங்க் :
https://rprajanayahem.blogspot.com/2013/02/blog-post_26.html?m=0
சென்ற 2020 ல் வெளி வந்துள்ள என் 'சினிமா எனும் பூதம்'நூலில் சந்திர பாபு பற்றிய பதிவில் இடம் பெற்றுள்ளது.
அது மட்டுமல்ல. 2014 ல் வெளி வந்த என்னுடைய 'சினிமா பதிவுகள்'நூலிலும் இடம் பெற்றிருக்கிறது.
இதனை இங்கே என் நூலில் உள்ள விஷயம் என்பதை மறைத்து சித்ரா லட்சுமணன் பேசியிருக்கிறார்.
இது தவறு. வேதனைப் படுகிறேன்.
கலைஞர் டிவியில் 'சினிமா எனும் பூதம்'எனும் தலைப்பிலேயே என்னை வைத்து Episodes எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் சந்திர பாபு பற்றியும் இந்த விஷயம் பேச இருக்கிறேன்.
நூற்றுக்கணக்கான பேர் ராஜநாயஹம் எழுத்தை திருடி போட்டுள்ளார்கள்.
'இது இப்படி ராஜநாயஹத்துக்கு தான் நடக்கிறது.'
என்று பல எழுத்தாளர்கள் வருத்தப்பட்டு
என்னிடம் சொல்கிறார்கள்.
கருப்பையா சுந்தரா கார்த்திகேயன் தான்
இந்த சித்ரா லட்சுமணன் பேச்சை Worst copy cat என்று கண்டனம் தெரிவித்து கமெண்ட் போட்டு விட்டு
என் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
உடனே நானும் அந்த வீடியோவில் இது
என் சினிமா எனும் பூதம் நூலில் உள்ள பதிவு என்பதை குறிப்பிட்டேன்.
நண்பர்கள் பா. அசோக், சரவணன் மாணிக்கவாசகம்,
கோபாலகிருஷ்ணன் சுந்தர ராமன்,
சரவணகுமார் அய்யாவு,
வாசுதேவன் காத்தமுத்து,
ராஜா ஹசன் ஆகியோர் வீடியோவில் இது
R. P. ராஜநாயஹம் பதிவு என்பதை சுட்டிக் காட்டியும் சித்ரா லட்சுமணனிடமிருந்து response இல்லை.
நண்பர்கள் அந்த சித்ரா லட்சுமணன் வீடியோவில்
கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
https://m.facebook.com/story.php?story_fbid=3166296983583746&id=100006104256328
கீழே சித்ரா லட்சுமணன் வீடியோ லிங்க் :
https://www.facebook.com/163266385391942/posts/331656651886247/