S. ராஜம்.
வீணை பாலசந்தரின் மூத்த சகோதரர்.
பன்முக ஆளுமை.
தியாகராஜ பாகவதரின் "சிவகவி"படத்தில் ராஜம் முதியவராக, வாலிப பையனாக, வேடனாகவும் நடிப்பில் தூள் கிளப்பிய Scene Stealer.
இவருடைய சகோதரி S. ஜெயலட்சுமி சிவகவியில் கதாநாயகி.
ராஜம் வரைந்த ஓவியங்கள் காலண்டர்களில் இடம் பெற்றிருக்கின்றன.
முதுமைக் காலத்திலும் செயலூக்கத்துடன் இயங்கியவர்.
ராஜம் பாடிய முத்துசாமி தீட்சிதரின் பிலஹரி ராக கீர்த்தனை விசேஷமானது.