Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

புரட்சி

$
0
0

Time Machineல ஏறிப்போனா என்னெல்லாம் கண்ணுல படுது.



தேங்கா டயலாக்: 
எல்லாம் அமஞ்சிக்கற்து தான்,
வாச்சிக்கற்து தான்..

..

2008ல் நான் எழுதிய பாரதி தாசன் பதிவில் புரட்சி கலைஞர் பட்டம் பற்றி
1990ல் புதுவை பல்கலைக்கழகத்தில் பேசியதை குறிப்பிட்டிருக்கிறேன்.

http://rprajanayahem.blogspot.com/2008/12/blog-post_04.html?m=1

புதுவை பல்கலை கழகம் சார்பில் பாரதி தாசன் நூற்றாண்டு விழாவில் பார்வையாளனாக கலந்து கொண்டேன் . ஜால்ரா சத்தம் சகிக்க முடியவில்லை . பாரதியை விட பாரதி தாசன் பெரிய கவிஞர் , பாரதியை தாண்டி விட்டார் என்ற ரீதியில் புலவர்கள் ,பேராசிரியர்கள் பேசினார்கள் . 'பாவேந்தர் என்று பாரதி தாசனை சொல்லவேண்டாம் . ஏனென்றால் அவர் ஒருவர் தான் புரட்சிகவிஞர் . புரட்சி கவிஞர் அவர் ஒருவர் தான் என்பதால் அவரை புரட்சிகவிஞர் என்று தான் சொல்லவேண்டும் 'என்று ஒருவர் எல்லோரையும் மிரட்டினார் .

நான் எழுந்து மேடைக்கு சென்று பேசினேன்
 "இன்று புரட்சி என்ற வார்த்தை மிகவும் கொச்சைபடுத்தபட்டு விட்டது . புரட்சி தலைவர் , புரட்சி தலைவி ..இப்படி ..    

  அந்தகாலத்திலே எம்ஜியார் எக்ஸ்ராவா நடிச்ச காலத்திலே எம்ஜியார் யாருன்னே தெரியாமல் இருந்த காலத்திலேயே புதுமைப்பித்தன் எழுதிய
 'திருக்குறள் செய்த திருக்கூத்து'என்ற கதையில் 'புரட்சிதலைவர்'என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியிருக்கிறார். கிண்டலாகத்தான்! 

இப்ப கூட 'புரட்சி கலைஞர் நடிக்கும் கரிமேடு கருவாயன்'னு போஸ்டர் ஓட்டறான். 
'யார்ரா புரட்சிகலைஞர்'ன்னு கேட்டா
 'அந்த கருவாயன் தான் புரட்சிகலைஞர்'சொல்றான். 

புரட்சி என்ற வார்த்தை இன்று Cliché ஆகிவிட்டது.

 அதனால பாரதிதாசனை பாவேந்தராகவே வைத்துக்கொள்ளுங்கள்.
புரட்சிகவிஞர் வேண்டாம் "என்றேன்.

..

2015ல் விஜயகுமாருடைய புரட்சி கலைஞர் பட்டம் பற்றி எழுதியிருக்கிறேன்.

http://rprajanayahem.blogspot.com/2015/01/blog-post_31.html?m=0

'படங்களில் தன் பெயருக்கு முன்னால் “புரட்சிகலைஞர்” பட்டம் போடப்படவேண்டும் என்று விஜயகுமார் வற்புறுத்திய காலம் உண்டு.
 அதிமுகவில் இணைந்து "அண்ணா நீங்க நினைச்சபடி நடந்திடுச்சி, புரட்சித்தலைவர் கையில் நாடிருக்கு"என்ற பாட்டுக்கு நடித்தார்.
சி.என்.முத்து டைரக்ட் செய்த ‘சொன்னது நீ தானா’ என்ற படத்தில் புரட்சிகலைஞர் பட்டம் போடப்படவில்லை என்று விஜயகுமாருக்கு வருத்தம். 

1980களில் இந்தப்பட்டம் விஜயகாந்துக்கு போய்விட்டது.'

பட்டம் யாரும் வழங்கவில்லை. அவர்களாகவே போட்டுக்கொண்டது.

ரவிச்சந்திரனுக்கு நான்கு சுவர்களில் 'திரையுலக இளவரசன்'  டைட்டில். கலை நிலவு என்று சொந்த படம் மஞ்சள் குங்குமம் படத்தில் போட்டுக்கொண்டார். 
'கலை நிலவு'முன்னதாக ஒன்றிரண்டு படத்தில் ஜெமினி கணேசன் டைட்டிலில்.
( ஜெமினி இறந்த போது காலச்சுவடு பத்திரிகையில் நான் 'கலை நிலவு'என்று தலைப்பிட்டு இரங்கல் எழுதினேன்)
விஜயகுமாருக்கு சீனியர் என்பதால் கொஞ்சம் அவருக்கு முன்னதாக புரட்சி கலைஞர் என்று ரவிச்சந்திரன் போட்டுக்கொண்டார்.
விஜயகுமாரை அடுத்து விஜய்காந்த்.



....

'புரட்சி கலைஞர் ரவிச்சந்திரன்' title picture referred by Aathmaarthi RS 
ஆத்மார்த்தி

Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>