Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

கோல்டன் பீச் ரிஸப்சனிஸ்ட் பெரியகுளம் சோமு

$
0
0




பெரியகுளம் சோமு.
வி.ஜி.பி. கோல்டன் பீச்சில் ரிஸப்சனிஸ்ட் ஆக இருந்தார்.



'சிகப்பு ரோஜாக்கள்'பட ஆரம்பத்தில்
 கமலுக்கு செக்ரட்டரியாக 
(ஜெயில் கேட்) காட்சியொன்றில்
  தலை காட்டியிருக்கிறார். சோமுவுக்கு டயலாக்கெல்லாம் கிடையாது.

இவருக்கு ஸ்ரீப்ரியா தயாரித்து நடித்த "நீயா?"படத்தில் முக்கியத்துவம் இருந்தது. படத்தின் ஆரம்பத்தில் சில காட்சிகளில் தான் வருவார்.

படத்தில் கமல் கதாநாயகன்.
விஜயகுமார், ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த், ஜெய்கணேஷ் இவர்களுடன் இந்த பெரியகுளம் சோமுவும் கமலின் நண்பராக வருவார். கதாபாத்திரம் பெயர் சலீம்.



இந்த ஆறு பேரும் கை நீட்டி நீயா என்பதாக கேட்கிற போஸில் 'நீயா?'பட போஸ்டர்.

தினத்தந்தி பத்திரிகையில் முழு பக்க விளம்பரம் வெளியிடப்பட்டது.

ஆண் இச்சாதாரி பாம்பை பதற்றத்தில் பெரியகுளம் சோமு தான் சுட்டுக்கொன்று விடுவதாக கதை.

முத்துராமனுக்கு கூட ஜெய்கணேஷுடன் மோதும் சண்டை காட்சி உண்டு.

டைட்டிலில் நடித்த நட்சத்திரங்களுக்கு நன்றி என்று போட்டு நடிகர்கள் பெயர் போடுவதை தவிர்த்து விட்டார்கள்.
பிஸியான துரை தான்
 'நீயா?'இயக்குநர்.

நடிகராக ஸ்ரீகுமார் என்ற பெயரில் தான்
பெரிய குளம் சோமு இருந்தார்.

 இவர் பற்றி ஒரு gossip காரணமாக notorious ஆக தெரிந்தார்.

நான் உதவி இயக்குனராக பணி புரிந்த படத்தின் பாடல் காட்சிக்காக வி.ஜீ.பி. கோல்டன் பீச் போன போது அங்கே என்.டி.ராமாராவ் ஸ்ரீதேவியுடன் ஆடிப்பாடும் டூயட் காட்சி தாசரி நாராயணராவ் இயக்கத்தில் சுறுசுறுப்பாக
நடந்து கொண்டிருந்தது. 
தெலுங்கு பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் சலீம்.

வி.ஜி.பி. கோல்டன் பீச்சில் 'நீயா?'போஸ்டர் நாயகன் பெரிய குளம் சோமு அப்போதும் கூட
 ரிஸப்சனிஸ்ட் ஆகத்தான் இருந்தார்.

ஷுட்டிங் ப்ரேக்கில் அவரிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.
இவர் மீது ஏன் இப்படி gossip என்று தோன்றியது.

Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!