ஓவியர், சிற்பி சந்ரு படைப்பு
ராஜ் லீலா :
"ஆஹா! என்னதொரு அருமையான படைப்பு! "
"சார், பிரம்மாதமான படைப்பு, மிகவும் அழகு!"
"ச்ச, சான்ஸே இல்ல, செமயா இருக்கு, இது வேற லெவல்"
இவையெல்லாம் கீழ்கண்ட சிலையை தொட்டு, பார்த்து ரசித்தவர்களின் பாராட்டுரை....ஆம்! இச்சிலை ஒரு பொக்கிஷமான படைப்பு. இச்சிலைக்கு மிகப்பெரிய வரலாற்று பின்னணி உண்டு. திறமான ஆய்வுகளுடன் ஓவியர் சந்ரு அவர்களால் இச்சிலையின் ஒவ்வொரு பகுதியும் மிக நேர்த்தியாக படைக்கபட்டுள்ளது.
பல்வேறு உருவங்களுடன், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள இச்சிலை பார்ப்போர் அனைவரையும் கவர்ந்திழுக்கும். உண்மையில் இது எங்குள்ள சிலை? இதன் வரலாற்றுப் பின்புலம் என்ன? என்ற ஆவல் மிகுதி அனைவரிடமும் உள்ளது..
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநருமான ம.ராஜேந்திரன் அவர்களை சந்திக்க அவரது இல்லத்திற்கு சந்ரு ஐயா உடன் சென்றிருந்தேன். அச்சமயம் இந்த சிலை அவருக்கு வழங்கப்பட்டது. கண்ட உடனே "இது பிரம்மாதமா இருக்கு... வரலாற்று பொக்கிஷம்.."என வியந்து பாராட்டினார். மேலும் "கடந்த வாரம் நம் முதலமைச்சர் டெல்லி சென்று பிரதமரை சந்திச்சார்.. அப்போது பிரதமருக்கு என்ன நினைவு பரிசு கொடுக்கலாம்னு மினிஸ்டர் என்னிடம் கேட்டார். இதை முன்னரே பார்த்திருந்தால், இதையே கொடுத்திருக்கலாம். மிக அருமையா இருந்திருக்கும்"என்றார்..
தமிழகத்தின் தலைசிறந்த தலைவரான நல்லக்கண்ணு அவர்கள் இச்சிலையை பார்த்து "மிகவும் நேர்த்தியான படைப்பு. வரலாற்றுப் புகழ் கொண்ட, அரிதான இச்சிலையை பெறுவதில் மிக்க மகிழ்ச்சி"என்றார்.
இதைப் போன்று விசிக தலைவர் டாக்டர். தொல். திருமாவளவன் அவர்களும் இச்சிலை குறித்த முழு வரலாற்றை கேட்டு மகிழ்ந்து, அதன் வடிவமைப்பை வியந்து பாராட்டினார்...
ஆகச் சிறந்த படைப்பான இச்சிலை என்னவென்று அறிந்திருப்பிர்கள். ஆம், நம் தமிழ் நாகரிகத்தை ஒத்த சிந்துவெளி நாகரிகத்தின் முத்திரையே இச்சிலையாகும்..
விலைமதிப்பற்ற இச்சிலை தற்போது அம்பை-குருவனத்தில் தயாராகிறது.. இது மட்டுமின்றி கலைநயமிக்க பல அற்புதமான சிலைகளும் குருவனத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.. மேலும் உலகின் பல நாடுகளில் இருந்து சிலைக்கான ஆர்டர்கள் வருவதால் மிகப்பெரிய அளவில் தயாரிப்பு தளம் உருவாக உள்ளது. நீங்கள் விரும்பும் எந்த Model-ம் fibre or bronze சிலையாக செய்து தரப்படும்.....
சிலைகள்
வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9994188367, 9884992815, 9489204816
- ராஜ் லீலா
...