Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1853

விசித்திர விதூஷகம்

$
0
0
விசித்திர விதூஷகம்

கடைசி காலத்தில்
 இப்படி  அணுகுண்டு போட்டு 
கதி கலங்க செய்கிறார்.
'உயிரோட தான் இருக்காரு பிரபாகரன்'

இப்படி கயிறு போட்டுட்டா அலக்கழிச்சிக்கிட்டே இருக்கலாமே.

இந்த மாதிரி கொளுத்திப் போட்டா
சரம் பட்டாசு வெடிச்சிக்கிட்டே ..

'நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிரோட இருக்காரு'ன்னு  
கொள்ள காலம் கொள்ள பேரு சொல்லி கெட சனம் 'உம்'னு உச்சுக்கொட்டலயா?
ஃபார்வர்ட் ப்ளாக் கட்சி இந்த
 பெரு நம்பிக்கையின் அஸ்திவாரத்தில் இயங்கியது.

History repeats itself.



காமராஜருக்கு பக்கபலமாக இருந்து ஸ்தாபன காங்கிரஸை வளர்க்க பாடுபட்டவர்
பழ. நெடுமாறன்.

இவருடைய தலைவர் ஈ.வி.கே சம்பத் 1971 தேர்தலில் கோபிச்செட்டி பாளையம்பாராளுமன்ற தொகுதியில் தோற்ற பின் ஸ்தாபன காங்கிரஸில் இருந்து விலகி இந்திரா காங்கிரஸில் இணைந்த பின்னும் காமராஜருக்கு பக்க பலமாக நெடுமாறன் நின்றவர்.
பெருந்தலைவர் மறைவுக்குப் பிறகு இந்திரா காந்திக்கு விசுவாசமாய் நின்றவர்.
ஜனதா கட்சி ஆட்சியில் முன்பு இந்திராகாந்தியை திமுக காரர்கள் மதுரையில் தாக்கிய போது அவர் மீது அடி படாமல் அவ்வளவு அடிகளையும், தானே வாங்கி காப்பாற்றிய போது பழ. நெடுமாறனுக்கு மண்டை உடைந்தது.
"கண்ணகியை அடித்து விட்டீர்கள்,மதுரையே பற்றி எரியபோகிறது! "என்று ஆவேசப்பட்டவர்.

காங்கிரஸ் அட்ஹாக் கமிட்டியில் இந்திரா காந்தி "My son who saved my life!"என்று பெருமிதத்துடன், நெகிழ்ச்சியுடன் அறிமுகப்படுத்தினார்.
நெடுமாறனை தன் மூத்த மகனாகவே இந்திரா கருதினார்.
அந்த இந்திரா காங்கிரஸையும் விட்டு வெளியேறி தனியாக கட்சி நடத்தினார்.
இந்திராகாந்தியின் மகனை கொன்றவர்களை நெடுமாறன் இன்று ஆதரிப்பது ஒரு வரலாற்று முரண்.
பேரறிஞர் அண்ணா, ஈ.வி.கே.சம்பத், காமராஜர், இந்திராகாந்தி என்று பல தலைமையை கண்ட ஒரு அரசியல்வாதி இலங்கை விடுதலைப்புலிகள்
தலைவன் பிரபாகரனின் ஊதுகுழல் ஆன விசித்திரம்.
..
1980ல் மதுரை மேற்கு தொகுதியிலிருந்து எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது மதுரையின் மற்றொரு தொகுதியில் எம்.ஜி.ஆர் சப்போர்ட்டில் இவர் ஜெயித்தார்.
நெடுமாறனுக்கு திக்கு வாய் ஒரு பலகீனம்.
அதை கவனமாக மேடையில் பேசும்போது மறைக்க முயல்வார். பேச்சும் சுவாரசியமாக, கூட்டத்தை கவர்ந்திழுக்கும்படியெல்லாம் இருக்காது.
"அன்றைய தினம் மகாகவி பாரதி அவர்கள் பாடல்கள் எழுதியபோது இவையெல்லாம் க...அ..விதைகளா என்று கேட்டார்கள். ஆனால் இன்று ......... "
தீப்பொறி ஆறுமுகத்திற்கு நெடுமாறன் என்றாலே இந்த திக்கு வாய் விஷயம் தான் அவல்.
"இந்த கொன்னவாயன் நெடுமாறன் சட்ட சபையில பேசுறாய்யா.. 'கே..எ..ஏரளாவுக்கு எ..எ..எரும மாட்டைக்கடத்துறாங்கெ..'.. அட எரும மாட்டுப்பயலெ.. எனக்கு ஒரு ஆசை.
இந்த கொன்னவாயன் நெடுமாறனுக்கும் மென்டல் பய ரஜினிகாந்துக்கும் பேச்சுப்போட்டி வக்கனும். எவன் ஜெயிக்கிறான்னு பாக்கனும்."
தமிழகத்தின் முதல் "மாவீரன்"நெடுமாறன் தான் தெரியுமா?
மாவீரன் தாமரைக்கனி..... மாவீரன் மு.க. அழகிரி......
இன்று இன்னும் அந்த பட்டம் ஒரு நூறு பேர் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்....
அண்ணாமலை பல்கலை கழகத்தில் நெடுமாறன் படிக்கும் போது
ஒரு போராட்டத்தின் போது சில மாணவர்கள் ஒரு மிகப் பெரிய பேரழிவை ரசாயண கூடத்தில் நிகழ்த்த முயன்ற போது நெடுமாறன் தான் தடுத்திருக்கிறார்.
அப்போது அங்கே மாணவராய் இருந்த ந.முத்துசாமி இந்த தகவலை என்னிடம் சொன்னார். முத்துசாமியின் மாணவ நண்பர் கஜராஜ் சொல்லின் செல்வர் ஈ.வி.கே. சம்பத்தின் தம்பி. கஜராஜ் அற்பாயுளில் மறைந்தவர்.
கண்ணதாசன் இந்த மதுரை நெடுமாறன் பற்றி மிக பிரமாதமாக தன் சுயசரிதை வன வாசத்தில் எழுதியிருக்கிறார்.
திமுகவை விட்டு ஐம்பத்தெட்டு வருடங்களுக்கு முன் சம்பத்தோடு வெளியேறி,
'திராவிட இயக்கத்தின் இரும்புமனிதர்'மதுரை முத்துவுக்கு எதிராக தைரியமாக அரசியல் செய்தவர் தான் நெடுமாறன்.
அப்போது தான் மதுரை மக்களுக்கு இவர் மாவீரன் ஆனார்.
மதுரை முத்துவின் கடைசி காலத்தில்
'இலங்கைப் பிரச்னை'அவரை நெடுமாறனுடன் இணைந்து ஒரே மேடையில் அமர வைத்தது.
இலங்கைப் பிரச்னையே முழுமையாக இவரை ஆக்கிரமித்து விட்டது.

வீரப்பனிடம் இருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரை 
மீட்டு அழைத்து வந்தவர் நெடுமாறன்.

என்னுடைய ஆங்கில பேராசிரியர்      R. நெடுமாறன்.
 பல தடவை பழ. நெடுமாறனை கைது செய்ய வேண்டி வரும்போதெல்லாம் போலீசார் குழப்பத்தில்  பேராசிரியர் நெடுமாறன் வீட்டு கதவை தட்டியிருக்கிறார்கள்.

பிரபலமான விவேகானந்தர் காலண்டர் 
பழ. நெடுமாறனுடைய
 குடும்ப சொத்து.

ஜெயலலிதா தோழி சசிகலா கணவர் நடராஜனுக்கு நெருக்கமான சகா நெடுமாறன்.
.....

Viewing all articles
Browse latest Browse all 1853


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>