Ramalingam Muthukumarasamy
'வேர்கள்'மு.ராமலிங்கம் :
தமிழின் ஆகச் சிறந்த பத்தி எழுத்தாளர்
R. P ராஜநாயஹத்தின் "தழல் வீரம்"கட்டுரைத் தொகுப்பு "ஜெய்ரிகி"பதிப்பகத்தில் இருந்து இன்று கிடைத்தது.
பல கட்டுரைகளை முன்னரே வாசித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் வகையை சார்ந்தவை.
அவரின் நினைவாற்றலும் ரசிக மனமும் பிரமிக்க வைக்கிறது.
அந்த காலத்தில் ரசிகமணி என டிகேசியை கூறுவார்கள்; ஆனால் தலைமுறை இடைவெளியோ என்னவோ எனது ரசனையில் அவர் எழுத்துக்கள் அவ்வளவாக கவனத்தை ஈர்க்கவில்லை. எனது ரசனையின் அடிப்படையில்
"ரசிகமணி"என்றால் அது ராஜநாயஹம்தான்.
தேர்ந்த வாசகர் கைகளில் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம். வாங்கி படியுங்கள்;
தொடர்ந்து அருமையான புத்தகங்களை வெளியிட்டு வரும் ஜெய்ரிகி பதிப்பகத்தை ஆதரியுங்கள்
பக்கங்கள்: 272
விலை ரூ 300
தொடர்புக்கு:8643842772