A joke is a very serious thing -2
மனைவி : ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட மாட்டேன்னு சொன்னேன். கேட்டிங்களா?
கணவன் : ஏன் என்ன ஆச்சு?
மனைவி : ராத்திரி பூனை வந்து எல்லா பாலையும் குடிச்சிட்டு போயிடுச்சி.
மந்திரி : பயப்படாதீங்க மன்னா. மனுஷனுக்கு ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.
மன்னன் : அது பரவாயில்லை .. போரிலும் சாவு வந்திடுமோன்னு தான் பயமாயிருக்கு.
"மன்னர் போரில் தோற்ற பிறகும் புலவர் அவரை வாழ்த்தி குறுந்தொகை பாடுகிறாரே?"
"மன்னரிடம் அவர் ஒரு பெருந்தொகை வாங்கி விட்டாராம்"
....
"எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடே வர்றதில்லை."
"அட, அப்படியா "
"ஆமா, என் கருத்தை ச்சொன்னால் தானே வேறுபாடு வர்றதுக்கு"
....
"துண்டு சீட்டை படித்தவுடன் பாகவதர் ஏன் டென்சன் ஆயிட்டார்?"
"கச்சேரி முடிந்தவுடன் தயவுசெய்து எழுப்பி விட்டுட்டு போங்கன்னு எழுதியிருக்காம்"
"ஒரு நல்ல குடிமகனுக்கு என்ன தேவை"
"ஊறுகாய் சார்"
நோயாளி : ஐஸ் வாட்டர்னா எனக்கு உயிர்.. டாக்டர்.
டாக்டர் : தாராளமா குடிங்க. ஆனா குடிக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் சுட வச்சு குடிங்க .
"ஆபரேசன்லே ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு மிஸ்டர் பாபு சங்கர் "
"ஐயோ டாக்டர் , நான் கௌரி சங்கர் "
"வெரி குட். என்னோட தப்பை சரியா கண்டு புடிச்சிட்டீங்களே"
காதலி : உங்களுக்கு ராணி என்ற பெயரில் ஏற்கனவே ஒரு பொண்டாட்டி இருக்கான்னு சொல்லவே இல்லையே?
காதலன் : உன்னை 'ராணி 'மாதிரி வச்சுக்கிறேன் ன்னு நிறைய தடவை சொல்லியிருக்கிறேனே.
"தலைவர் இன்னும் பழைய ஞாபகத்திலேயே இருக்காரு"
"என்ன விஷயம்?"
"அவரோட பாதுகாப்புக்காக பின்னால் ஜீப்புலே வர்ற போலிசைப் பார்த்துட்டு காரை வேகமா ஓட்ட சொல்லி டிரைவர் கிட்டே சொல்றாரு"
சுஜாதா சொன்ன ஜோக்:
வசந்தின் எச்சரிக்கை - வயாக்ரா அதிகம் சாப்பிடக்கூடாது. ஒரு ஆசாமி ஏழு மணி நேரத்துக்கு ஒரு வயாக்ரா என்பதை சரியாக புரிந்துகொள்ளாமல் ஒரு மணிக்கு ஏழு சாப்பிட்டானாம். இறந்து போய்விட்டான். சவப்பெட்டியை மூடவே முடியவில்லை
ஜாப் அப்ளிகேஷனில் எம்.ஏ. எம்.ஃபில் படித்த பெண் ஒருத்தி SEX - என்பதற்கு நன்கு யோசித்து விட்டு பதில் எழுதினாள் - Once in a Blue Moon.
‘Once in a blue moon' means "Not very Often""Very rarely"
......
2008 post