மெய்யழகன்
ஆரம்பத்தில் கண்ணை மூடி 'அத்தான் நான் யாருன்னு சொல்லுங்க "என்று உற்சாகமாக மாப்ள கேட்கும் போதே கண்ணைத் திறந்தவுடன்
கடைசியாக படத்தில் வருகிற உருளக்கிழங்கு கதையை சொல்லி அத்தான் நினைவில் மெய்யழகன் ஞாபகம் வந்திருக்க வேண்டும்.
இயல்பாக அப்படித்தான்
இது மாதிரி சூழலில்
எங்கேயும் எப்போதும் நடக்கும்.
( இங்கே அப்டின்னா கதையே காலியாயிருக்குமேங்க. )
படத்தை இன்னும் மிக பிரமாதமாக வேற ரூட்ல கொண்டு போயிருக்க முடியும்.
அரவிந்த் சாமிக்கு இவ்வளவு super ego தேவையேயில்லை. கார்த்தியிடம் பட்டென்று ஞாபகம் வரவில்லையேன்னு
சொல்லியிருந்தா மாப்ள அத்தானிடம் கடைசியில் பேசுகிற வசனங்கள் முதலிலேயே வந்திருக்கும்.
'அவன் யாருன்னு கண்டு பிடிக்க முடியல'ன்னு படம் பூரா அரவிந்த் சாமி தவிச்சி தக்காளி விக்கணுமா? ஓவர் பில்டப்.
கல்யாண வீட்ல ராஜ்கிரண்ட்ட கேக்கவே முடியலன்றது வேடிக்க.
ஊருக்கு வந்தப்புறம் ஃபோன் போட்டு கேட்டிருந்தா ராஜ்கிரண் தெளிவா சொல்லியிருப்பார். ஜவ்வா இழுக்கணுமா?
ரொம்ப காலத்துக்கு அப்புறம் ரெண்டு ஜீவனுள்ள கதாபாத்திரங்கள்.
கார்த்தி "பச்சக்"என்று மனதில் ஒட்டிக்கொண்டு விட்டார்.
என்னா பெர்ஃபாமன்ஸ்.
"கொஞ்சம் தள்ளி இன்னொரு லாட்ஜ் இருக்கு. இவ்வளவு நீட்டா இருக்காது."
Zorba the Greek ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
அரவிந்த் சாமிக்கு கார்த்தியிடம் கிடைக்கிற தரிசனம்.
சோர்பா படைத்த கலைஞன் கஸான்சாகிஸ்.
படமாக வந்த போது ஆந்தணி க்வின்.
அரவிந்த் சாமி பிரமாதமான Scene stealer. செம்ம. பேசாமலேயே கூட கலக்குகிறார்.
மணிரத்னம் 'கடல்'பார்த்தப்பவே நிறைய்ய பயன்படுத்தப்பட வேண்டிய நடிகர் என்று குறிப்பிட்டதுண்டு.
கமல் ஹாசனுடன் அரவிந்த் சாமி நடிக்கவேயில்லையே
- ஆதங்கம் வெளிப்படுத்தியதுண்டு.
மாடு பாம்பு த்ரில்.
இடைவேளைக்கு பிறகு வருகிற தொய்வு
கதையில் விழுந்து விட்ட ஆரம்ப ஓட்டையால். வேற வழியில்ல. No go.