Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1854

“வண்டிச்சோடை”யில் ஆட்டுக்காரன்

$
0
0

பெசண்ட் நகரில் ஏஸ்கிலஸின் அகமெம்னான் நாடகம் பார்க்க ந.முத்துசாமியுடன் போயிருந்த போது நாடகத்தை மொழிபெயர்த்த ஜம்புநாதன் அவர்களைப் பார்த்தேன்.


திருச்சியில் அவர் 2002ல் யூஜின் அயனெஸ்கோவின் “பாடம்” நாடகத்தை இயக்கி மேடையேற்ற செய்த முயற்சி! 

என்னை protagonist roleல் ப்ரொஃபசர் ஆக நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். பெண்ணேஸ்வரன் தமிழில் மொழி பெயர்த்திருந்த நாடகம். காலச்சுவடில் வெளியாகியிருந்தது. நான் வசனங்களையெல்லாம் மனப்பாடம் செய்திருந்தேன். ஆனால் முயற்சி ஈடேறவில்லை. மாணவி பாத்திரத்தில் நடிக்க ஜம்புவின் நண்பர் ஒருவருடைய மனைவி முதலில் நடிக்க ஒப்புக்கொண்டு, பிறகு அவர் கர்ப்பமாயிருந்த காரணத்தால் முடியாமல் போனது. பின் அந்த நேரத்தில் வேறு பெண் யாரும் நடிக்க கிடைக்கவில்லை. ஒரு நல்ல நாடகத்தில் கதாநாயகனாக நடிக்கிற வாய்ப்பு எனக்கு தட்டிப்போயிற்று. A slip between the cup and lip.
பிஎஸ்என்எல் கண்ட மிக நேர்மையான அதிகாரி ஜம்பு.
இவரை விட உயர்ந்த பதவியில் இருந்த கோவிந்தராஜு
சொல்வார் : ”என்னுடைய நேர்மைக்கு எனக்கு ஜம்பு தான் ஆதர்ஸம்!”
ஜம்பு நாதன் பற்றி ந.முத்துசாமிக்கு ஏற்கனவே இந்த விஷயத்தை குறிப்பிட்டு, அவருடைய நாடக ஈடுபாடு பற்றியெல்லாம் நிறைய சொல்லியிருந்தேன். பெசண்ட் நகர் ‘ஸ்பேஸஸ்’ தியேட்டரில் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தேன்.

………………………………………………………
தேவதச்சன் கவிதை 

காற்று ஒரு போதும் ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப் பூச்சிகள், காலில்,
காட்டைத்தூக்கிக்கொண்டு அலைகின்றன
வெட்டவெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக்கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை!


ந.முத்துசாமியின் ”வண்டிச்சோடை” நாடகத்தில் ஒரு ஆட்டுக்காரன்!
ஆடாய் இருந்து கசாப்புக்குத் தப்பி மூலிகைகளை மேய்ந்து மனிதனாக மாறிய ஆட்டுக்காரன்.
“ ஒங்க அனுபவத்துக்கு அடங்காததெல்லாம் பொய் இல்லே……ஆடு மனுஷனா மாறினா அதுக்கு அறிவே அலாதி. கசாப்புக்குப் போகாமே தப்பிச்ச ஆடு நான்…… ஆட்டுக்கு மரணம் கசாப்புக்கடையில தான் உண்டு. கசாப்புக்குத் தப்பிய ஆட்டுக்கு மரணமில்லே… கசாப்புக்குத் தப்பிய ஆடு மூலிகைகளையே மேய்ஞ்சிக்கிட்டிருந்தா மனிதனாய் மாறிடும். சிரஞ்சீவியாயிடும்……..”


”வண்டிச்சோடை” நாடகம் என்னுடைய இயக்கத்தில் முதல் முறையாக மேடையேற இருக்கிறது! ஹிண்டு ட்ராமா ஃபெஸ்டிவலில் ஆகஸ்ட் மாதம் சென்னை மியூசியம் தியேட்டரில்!

………………………………………………………………………

Viewing all articles
Browse latest Browse all 1854

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>