Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

காருக்குறிச்சி அருணாச்சலம்

$
0
0

’சிங்காரவேலனே தேவா’ ஆபேரி ராக பாடலுக்கு நாதசுரம் வாசித்த காருக்குறிச்சி அருணாச்சலம்!
காருக்குறிச்சி பண்டாரம் ஜாதி. பூ கட்டும் பண்டார ஜாதியைச் சேர்ந்தவர்.

காருக்குறிச்சி அருணாச்சலத்துக்கு மூன்றுக்கு மேற்பட்ட மனைவியர் உண்டாம்.
ஒரு புகைப்படம் அபூர்வமானது. அதில் மூன்று மனைவிகளோடு அவர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இருக்கிறது!
தன்னுடைய குருநாதர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை போலவே தானும் மூன்று பொண்டாட்டிக்காரன் என்று காருக்குறிச்சி சொல்லிக்கொள்வார்.
ஒரு திரைப்பட நடிகையையும் அவர் திருமணம் செய்து கொண்டதாகவும் செய்தி.

1921ம் வருடம் ஏப்ரல் 26ம் தேதி பிறந்த காருக்குறிச்சி 1964ம் வருடம் ஏப்ரல் 7ம் தேதி மறைந்திருக்கிறார்.
நாதசுரம் வாசிக்கும்போதே மாரடைப்பால் இறந்தார்.
ஆனால் திருநெல்வேலி கலெக்டர் வீட்டில் வாசிக்கும்போது கலெக்டர் மகள் மீது காதல் கொண்டதால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக ஒரு செய்தி உண்டு. அவர் மறைந்த போது அவருக்கு வயது நாற்பத்தியிரண்டு.

கோவில்பட்டியில் காருக்குறிச்சிக்கு உள்ள சிலை ஜெமினி கணேசன் உபயம். மகா கஞ்சன் என்று ஜெமினி கணேசன் பற்றி சொல்வார்கள். ஆனால் அவர் தேவையான, நியாயமான காரியங்களுக்கு நல்ல நன்கொடை கொடுத்ததுண்டு.
சினிமா உலகைப் பொருத்தவரை கஞ்சத்தனத்திற்கு சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், நாகேஷ் அந்தக்காலத்தில் ரொம்ப பிரபலம். எம்.ஜி.ஆர் வள்ளல் குணம் தெரிந்தது தான். எஸ்.எஸ்.ஆர் நிறைய கட்சிக்கே வாரியிறைத்தவர். ஜெய்சங்கர் தர்ம குணமும் எல்லாருக்கும் தெரியும்.
கி.ராஜநாராயணனிடம் பேசும் போது காருக்குறிச்சி பற்றி எப்போதும் ஏதாவது சொல்வார்.
காருக்குறிச்சியின் முதல் மனைவியின் அப்பா முத்தையா புலவர். கி.ராவிற்கு அருணாச்சலத்தின் ஷட்டகர் பொன்னுசாமி மிகவும் பரிச்சயமானவர்.
முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. ஆனதால் இரண்டாவது ஒரு ஏழைப் பெண்ணை மணந்தார் காருக்குறிச்சி. அவருக்கு குழந்தைகள் பிறந்தார்கள்.
திடீரென்று மூன்றாவது கல்யாணம் செய்து கொண்டார். இதற்கு அவர் கி.ராவிடம் காரணம் சொன்னார்.
“கச்சேரிகளுக்கு செல்லும்போது பல மாதிரி கெட்டுப் போக வாய்ப்பு அதிகம். அதனால் மூன்றாவது மனைவியைக் கூட அழைத்துப் போய் சோதனைகளைத் தவிர்க்க முடியும்.”
அப்புறம் பார்த்தால் திரையுலகைச் சார்ந்த ஒரு நாட்டியக்கார நடிகையின் தங்கையையும் கூட திருமணம் செய்து கொண்டார்.


‘கொஞ்சும் சலங்கை‘ யில் நாகஸ்வர வித்வானாக ஜெமினி கணேசன் நடிப்பைப் பார்த்து பிரமித்துப்போய் காருகுறிச்சி “அது எப்படிய்யா? நாகஸ்வரம் இந்த இடத்தில் மேலே தூக்கணும், இங்க இறக்கணும், சீவாளியை இப்படி இப்படிச் சுத்தம் பண்ணணும் இவ்வளவு நேர்த்தியா உன்னால முடிஞ்சது. எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடேன்” என்று மனம் விட்டுப் பாராட்டியதைப் பற்றிப் புளகாங்கிதத்துடன் என்னிடம் சொன்னபோதே, காருகுறிச்சி பற்றிய நினைவுகளில் மூழ்கி, நெகிழ்ந்து உடைந்த குரலில், ‘ நல்ல மனுஷனெல்லாம் அற்பாயுசிலே போய்ச் சேந்துட்டான்’ என்று ஏங்கினார் ஜெமினி.

இப்படி ஜெமினி கணேசன் என்னிடம் காருக்குறிச்சி பற்றி பேசிய விஷயத்தை நான் கி.ரா.விடம் சொன்ன போது அவர் 
“காருக்குறிச்சி கல்யாணம் செய்து கொண்ட சினிமா நடிகை பற்றி ஜெமினியிடம் கேட்டிருக்கலாமே. கேட்காமல் விட்டு விட்டீர்களே. ஏன் கேட்கவில்லை?” என்று ரொம்ப என்னிடம் ஆதங்கப்பட்டார். ஜெமினி கணேசன் இறந்து அப்போது எட்டு வருடம் ஆகியிருந்தது.
காருக்குறிச்சியின் இரண்டாவது மனைவியின் மூத்த மகள் இந்திரா பழனியில் வாழ்ந்து மறைந்திருக்கிறார். தன் தகப்பனுக்காக அங்கு ஒரு மணி மண்டபம் கட்டினார் இந்த இந்திரா.
காருக்குறிச்சியின் மூன்றாவது மனைவி தஞ்சாவூர்க்காரர். அவருக்கு சரவண பவன் என்று ஒரு மகன். அந்தப் பையன் ஒரு எஞ்ஜினியர்.
டாக்டர் ச. வீரப்பிள்ளை என்பவர் கிராவுக்கும் எனக்கும் நல்ல நண்பர். சரவண பவனை காரைக்காலில் சந்தித்ததாக கிராவிடம் சொன்னார் வீரப்பிள்ளை.

கி.ரா பழைய நினைவில் மூழ்கி என்னிடம் சொன்ன விஷயம் ஒன்று.
காருக்குறிச்சியின் மகனை நாகசுர வித்வானாக்க வேண்டும் என்று கி.ரா வற்புறுத்தினார். காருக்குறிச்சி அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. மறுத்துத்தலையை ஆட்டினார். ’நாகசுரம் வாசிப்பவனுக்கு சரியான மரியாதையை இந்த சமூகமும் சங்கீத உலகமும் தருவதேயில்லை’ என காரணம் சொன்னாராம்.




Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>