Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1879

அப்படி காலத்தில் இப்படியும் பிறவி!

$
0
0

மணிக்கொடி சிட்டி என்ற பெ.கோ.சுந்தரராஜன் தெலுங்கு பிராமணர். நல்ல கறுப்பு நிறம்.
சென்னையில் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப்போகிறார். “ Non brahmins சாப்பிடுவதற்கு அடுத்த ரூம். இங்கே பிராமணா தான் சாப்பிடுவா” என்று அவரிடம் சொல்கிறார் ஒரு சர்வர். சிட்டி தன்னை ஒரு பிராமணர் ஆக வெளிப்படுத்திக்கொள்ளாமல் பிராமணரல்லாதவரோடு உட்கார்ந்து சாப்பிடுகிறார்.
ஸ்வாமினாத ஆத்ரேயன் கு.ப.ராவின் சிஷ்ய பரம்பரை. ’மரகத வீணை’ சிறுகதை எழுதியவர். தி.ஜானகிராமனின் நண்பர். தஞ்சாவூருக்கு போயிருந்த சிட்டி ஸ்வாமினாத ஆத்ரேயனைப் பார்க்க அவருடைய ‘கமலா ஸ்டோர்ஸ்’ போகிறார். ஆத்ரேயனுக்கு சந்தோஷம். கடைப்பையனை அவருடன் தன் வீட்டுக்கு அழைத்துப் போய் அவரை சாப்பிட வைக்கச் சொல்கிறார்.
அங்கே சிட்டியை Non- brahmin என்று நினைத்து அவருக்கு திண்ணையிலேயே சாப்பாடு பரிமாறுகிறார்கள். தன்னை பிராமணராக காட்டிக்கொள்ளாமல் சிட்டி சாப்பிட்டு விட்டு கிளம்புகிறார்.

................................................................................




photos
1. சிட்டி தம்பதியருடன் ராஜநாயஹத்தின் மூத்த மகன் கீர்த்தி
2. சிட்டியுடன் ராஜநாயஹம்

Viewing all articles
Browse latest Browse all 1879

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>