Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1918

ஷம்மி

$
0
0

ஷம்மி என்ற செல்லப்பெயரால் அறியப்படும் எம்.சண்முகம் அவர்கள் 19 வருடம் சன் டிவியில் பிரபலமாக இருந்தவர். அவர் செய்தி வாசிக்கும் நேர்த்தி பற்றி இன்று கூட சிலாகிப்பவர்கள் உண்டு.
இப்போது நியூஸ் 7 சேனலில் தலைமைப் பதவியில் இருக்கிறார்.

மதுரை வெள்ளச்சாமி நாடார் கல்லூரியின் முன்னாள் மாணவர்.

முகப்பொலிவுடன் கூடிய சண்முகத்தின் கணீர் குரல். கணீர் குரலில் ‘கனிவு’ இருப்பது அவருடைய தனித்துவ விஷேசம். Powerful voice with compassion!
பரந்த அளவில் இலக்கிய அறிவு.
நியூஸ் 7 சேனலில் ந.முத்துசாமியின் ’பேசும் தலைமை’ நிகழ்ச்சிக்காக ஸ்டுடியோ போயிருந்த போது ஷம்மியை சந்திக்க வாய்த்தது.
உரையாடல் கலையில் அவருடைய சீர்மையை வார்த்தையில் விவரிக்க முடியாது.
நிறைவான உரையாடல் எப்போதும் சாத்தியப்படுவதில்லை. அன்று ஷம்மியுடன் பேசியதை எந்நாளிலும் மறக்கவே முடியாது. திருப்பாவை, த்ரூஃபோ!
திருப்பாவை மூன்றாவது பாடல்’என்னை இழந்த நலம்’ வரிகள் பற்றிய பிரமிப்பு, த்ரூஃபோவின் ’Woman next door’ திரைப்படம், சாக்லேட் மூலப்பொருள் தயாரிப்பில் குழந்தைத்தொழிலாளிகளின் நெஞ்சை உறையச்செய்யும் சோகம் பற்றிய டாகுமெண்ட்ரி….. நவீன தமிழ் இலக்கியப்பரிச்சயம்.
ஏதோ அருவியின் அருகில் இருக்கும்போது ஏற்படும் சுகானுபவமாக ஷம்மியுடன் இருந்த தருணம்.

அவரை சந்திக்க அந்த கண்ணாடி அறைக்கு வெளியே இருந்து அவரைப் பார்த்து புன்னகை செய்த போது ‘உங்களை எதிர்பார்த்திருந்தேன்’ என்ற தோரணையில் உடன் தலையசைத்து அழைத்து ஏதோ பல வருடங்கள் பழகிய நட்பு போல் மிக சகஜமாக பேச ஆரம்பித்தது… தடைப்பட்ட ஒரு உரையாடலை, விட்ட இடத்தில் இருந்து தொடர்வது போன்ற அனுபவமாக அந்த முதல் சந்திப்பு எனக்கு ஒரு உணர்வை ஏற்படுத்தியது.

………………………………………………………………………………


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>