Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

பரோட்டா, புரோட்டா

$
0
0


எங்கள் வீட்டிலே எப்போதும் கீர்த்தியும் அஷ்வத்தும் குழந்தைகளாக இருந்த காலம் தொட்டு இன்று வரை புரோட்டா சாப்பிடுவது என்றால் ரொம்ப இஷ்டம். காலை,மதியம், இரவு மூன்று வேளையும் புரோட்டா சாப்பிடுவது என்றாலும் சரி.சலிக்கவே மாட்டார்கள். மற்ற உறவினர்கள்,நண்பர்கள் வீடுகளிலும் குழந்தைகள்,பெண்கள்,ஆண்கள் எல்லோருக்கும் பிடித்த பட்சணம் புரோட்டா தான் என்று அறிய வந்தேன். வெளியே சாப்பிடப்போனால் புரோட்டா சாப்பிடுவது தான் முதல் சாய்ஸ்.வீடுகளில் பெண்களுக்கு சமையல் ஓய்வு கொடுக்கவேண்டுமென்றால் ஹோட்டலில் வாங்குவது புரோட்டா.
ஆஹா மதுரை புரோட்டா! சொல்லப்போனா மதுரையும் மதுரைக்கு அந்தப்பக்கம் தான் புரோட்டான்னா புரோட்டா
திருநெல்வேலி, விக்கிரம சிங்கபுரம் ,தூத்துக்குடி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர்,  போன்ற ஊர்களில் சாப்பிட்ட புரோட்டா, சால்னா,மட்டன் வருவல் ருசி தான் எப்போதும் நாவில் ஏக்கமாய் நிறைந்திருக்கிறது.இங்கே நான் புரோட்டா சாப்பிட்ட ஊர்களைத் தான் சொல்லியிருக்கிறேன். அங்கெல்லாம் புரோட்டா கடைகள் கலைநுட்பத்துடன் 
(வேறு வார்த்தை என்ன இருக்கிறது?) ரொம்ப ரசனையுடன் நடத்துகிறார்கள்.

எம்.டி.முத்து குமார சுவாமி என்றசில்வியாஎழுதிய சிறுகதை “தமிழ் மகளிர்க்கு அசரீரீ சொன்ன புராணக்கதை”
அதில் “ ‘பரோட்டா’,’பரோட்டா என்றழைக்கப்படும் விசித்திர வடக்கத்திய மைதா வஸ்து தமிழரின் உணவுப் பொருளாகியது. ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, தேசீய நெடுஞ்சாலைக்கு தேசீய நெடுஞ்சாலை என முளைத்த எண்ணற்ற டீக்கடைகளில் பரோட்டா செய்யப்படுவதைக் காண்பது கண் கொள்ளாக் காட்சி. கறு கறுவென்று கட்டுமஸ்தான உடம்புடனும் புஜ பலத்துடனும் விளங்கும் ஒரு தமிழரே பரோட்டா செய்யத் தகுதியானவர். அவர் மைதாவுடன் தண்ணீரும் எண்ணெயும் கலந்து இரண்டு கால்பந்துகள் இணைந்திருக்கும் அளவில் உருண்டையாக உருட்டி டமீர் டமீரெனக் கல்லில் அடித்து மாவைப் பக்குவப்படுத்துவார். பின் அதை மென்மையாக வசியப்படுத்தி லாவகமாக காற்றில் வீச, மந்திரத்தால் கட்டுண்டது போல துணியென விரியும் மாவு. இவ்வாறாக அது காஷ்மீரப் பட்டின் மெல்லிசான தன்மையை அடைந்தவுடன் அதை லேசாக மடித்து வட்டமாகச் சுற்றி வைப்பார். இவ்வளவு நுணுக்கமாக செயற்பாடுகளுக்கு பரோட்டா சிருஷ்டியில் உட்பட்டாலும் அதை உண்பதற்கு அசுரபலம் வேண்டும்.பரிசாரகரே பெரும்பாலும் பரிமாறும்போது பரோட்டாவை பிய்த்துப் போட்டு பேருதவி செய்வார்.பசித்த வயிற்றில் கல்லென நிறையும் பரோட்டாவை சாப்பிட்டுச் சாப்பிட்டுப் பழகிப் போன தமிழர்களுக்கு ஐயகோ வீட்டில் இப்பலகாரத்தை ருசிக்கும் வாய்ப்பு லபிக்கவே இல்லை. ஏனெனில் புஜகீர்த்தியற்ற தமிழ் மறமகளிரால் இவ்வடக்கத்திய உணவுப்பண்டத்தை செய்ய முயற்சித்த போதெல்லாம் ஏமாற்றமும் தோல்வியுமே மிஞ்சியது.பெரும்பான்மையான நேரங்களில் வெந்த மைதா களியையே அவர்களால் உருவாக்க முடிந்தது. “

ஷங்கர்ராமசுப்ரமணியன்கவிதை
நான் தமிழ புரோட்டா
நீங்கள் என்னை தூள்தூளாக்குங்கள்
மீண்டும் நீர் ஊற்றிச் சேர்த்து
உருட்டிப் பிசைந்து
மூர்க்க பலத்தால் என்னை
அடித்துத் துவைத்தெடுங்கள்
பாலியெஸ்டர் துணிபோல்
என்னை நெகிழ்வாக்கி
நீட்டி விசிறடித்து
காற்றுதங்கும் பலூன் பந்துகளாக
என்னை மேஜையில் அடுக்குங்கள்.
அப்போதும் ஒளியூடுருவும் கடவுள் போல்
நான் ஒளிர்வேன்.
பின்னர் மீண்டும் தட்டி மடித்து
வட்ட சதுர முக்கோணங்களாக
எண்ணெய் கொதிக்கும்
வாணலியிலோ
கல்லிலோ இட்டுப் பொறித்தெடுங்கள்
உங்கள் அரும்பசிக்குச் சுவையான
உணவாய் நான் மாறுவேன்…………………
உங்கள் மாமிசமும் சேர்ந்த
குழம்பில்
நான் மிதந்தூறிக் கொண்டிருக்கிறேன்.
மீண்டும்
மடிப்பு மடிப்பாக
தூள்தூளாக கரைந்துபோகக்
காத்திருக்கும்
தமிழ் புரோட்டா தான்
நான்.



Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>