Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

Individual Choice

$
0
0

'என்னுடைய பிராமண நேசம் உறுதியானது '
ஆதவனின் 'அன்னை வடிவமடா 'சிறுகதை படித்து பாருங்கள்.
ஒரு இனமே கொடூரமானது என்று பாசிசம் பேசுகிற மனிதர்களுடன் நான் என்றும் உடன்படவே மாட்டேன்.
யூத இனத்தின் மீது ஹிட்லர் காட்டிய கொடிய வெறுப்பை தான் 'பாப்பானையும் பாம்பையும் கண்டால் பாப்பானை முதலில் அடி 'என்று திராவிட சித்தாந்திகள் முன் வைத்தீர்கள்.
தலித்களுக்கு அவமானம், புறக்கணிப்பு, கொடுமை எல்லாவற்றையும் கடந்த நூறு வருடங்களில் நிகழ்த்தி காட்டியது பிற்படுத்த வகுப்பை சார்ந்த ஜாதி இந்துக்கள் தான்.இந்த ஜாதி இந்துக்கள் தான் அனைத்து திராவிட கட்சிகளிலும் முக்கிய பங்கு வகித்தார்கள்.


பாரதி துவங்கி குபரா, பிச்சமூர்த்தி, மௌனி, க நா சு, சிட்டி, சி சு செல்லப்பா,
லா ச ரா, தி .ஜானகி ராமன், கரிச்சான் குஞ்சு,சுந்தர ராமசாமி, நகுலன்,
ந.முத்துசாமி, அசோக மித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஆதவன் போன்ற பிராமணர்கள் தான் எனக்கு புனிதர்கள் .
Great writers are the Saints for the godless!


ஒரு முறை திருச்சியில் 'ந .பிச்சமூர்த்தியின் கலை : மரபும் மனித நேயமும் 'நூல் பற்றி கருத்தரங்கம். நான் தான் சுந்தர ராம சாமி எழுதிய இந்த புத்தகம் பற்றி பேசுவதாக ஏற்பாடு.

ஒரு பேராசிரியன் என் உரை ஆரம்பிக்கு முன்
'ந.பிச்சமூர்த்தி நாலாந்தரமான எழுத்தாளர். புதுமைப்பித்தன் தான் பெரிய எழுத்தாளர்.ந பிச்சமூர்த்திபற்றியெல்லாம் சுந்தர ராமசாமி ஒரு புத்தகம் எழுத வேண்டுமா ?'என்று ஊளை இட்டான்.

இந்த பேச்சில் உள்ள அராஜகம் வெளிப்படையானது. புதுமைப்பித்தன் எழுத்து எனக்கும் மிகவும் மரியாதைக்குரிய விஷயம். ஆனால் பிச்ச மூர்த்தி என்ற கலைஞனை காரணமே சொல்லாமல் நிர்த்தாட்சண்யமாக பண்டிதன் ஒருவன் பேட்டை ரௌடி போல தூக்கி வீசியதற்கு சரியான பதிலடி கொடுக்காவிட்டால் அவனுக்கு குளிர் விட்டு துளிர் விட்டு போகும்.


நான் ஆரம்பித்தேன் "வெங்கட் சாமிநாதன் சொல்வார் -'நான் மதிக்கும் ஒன்றிரெண்டு எழுத்தாளர்களில் ந பிச்ச மூர்த்தி முதலாமவர் . '
இந்த வாக்கியம் மிகவும் சிலாக்கியமானது. மீண்டும் அவரது வார்த்தைகளை அசை போடுங்கள்.

க நா சு எப்போதும் மணிக்கொடி எழுத்தாளர்களில் சிறுகதை சாதனையாளர்களாக புதுமைப்பித்தன்,மௌனி, கு .ப .ரா, ந .பிச்சமூர்த்தி நால்வரையும் குறிப்பிடுவார்.

லா. ச .ரா சுபமங்களா பேட்டியில் கேள்வி "உங்களை கவர்ந்த,பிரமிக்க வைத்த எழுத்தாளர் யார்?
லா.ச .ரா பதில் "அந்த காலத்தில் ஒருத்தர் இருந்தார். ந. பிச்சமூர்த்தி. ரொம்ப விரும்பி படிச்சேன்.ஆரம்ப காலத்திலிருந்து இன்னும் அந்த பிரமிப்பு நீங்கவே இல்லை! "

நான் சொல்கிறேன் . 'கபோதி' ,'காவல் ''அடகு 'போன்ற பிச்ச மூர்த்தி யின் கதைகள் புதுமை பித்தனின் எந்த கதைக்கும் சவாலானவை. தனிப்பட்ட முறையில் எனக்கு ந பிச்ச மூர்த்தியின் மீது புதுமைபித்தனை விட அபிமானம்,மரியாதை உண்டு "என்றேன்.
சில நேரம் அசிங்கமான உளறல்களுக்கு இப்படி பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.


இப்படி நான் சொன்னவுடன் அந்த 'தமிழ் பேராசிறியவன்'கொந்தளித்து எழுந்து 'என்னை அவமானப்படுத்துவதற்காக இவர் திட்டம் போட்டு இந்த கூட்டத்திற்கு வந்திருக்கிறார். 'என மீண்டும் மீண்டும் சங்கு சக்கர சாமி வந்து திங்கு திங்கு ன்னு ஆட ஆரம்பித்தான்.

நான் பேசியதில் பிச்சமூர்த்தியை தூக்கி பிடித்ததில் இவனுக்கு என்ன அவமானம். அது தான் பண்டித திமிர். முறையாக தரவுகளை வைக்க போகிறேன் என்பதை புரிந்து கொண்டவுடன் அவனுடைய பாண்டித்யத்துக்கு அவமானம்!

Individual Choice என்று ஒன்று எனக்கு இருக்கிறதல்லவா? அவன் நிர்த்தாட்சண்யமாக சுந்தர ராமசாமியை அவமானப்படுத்தி ந.பிச்சமூர்த்தியை தூக்கி ஒட்டு மொத்தமாக கடாசும்போது ஒரு கலைஞனை நான் தூக்கி பிடிக்க எனக்கு உரிமை இல்லையா? அதுவும் நான் வசமாக வெங்கட் சாமிநாதனை,
க நா சு , லாசரா ஆகியோரை துணைக்கு கூப்பிடவும் அவன் திகைத்து போய் அசிங்கமாக ஆட ஆரம்பித்தான்.

இவனுக்கு கரண்ட் ஷாக் கொடுக்க வேண்டாமா?அதனால்
"உட்கார்ரா சும்பக்கூதி .. "என்று நாலாந்தரமாக நான் இறங்கி ஒரு சத்தம் பலமாக கொடுத்தேன்.

சிலை மாதிரி அசையாமல் தலையில் கையை வைத்து உட்கார்ந்து விட்டான்.இது தான் அவனுக்கு உண்மையான அவமானம் என உணர்ந்து அழாத குறையாக உறைந்து போய் உட்கார்ந்து விட்டான்.பூர்ண பௌர்ணமி திடீரென்று அமாவசையானது போல!

இலக்கிய கூட்டம் உடனே ..அந்த நிமிடத்தில் இனிது நிறைவடைந்தது!

................................

http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_29.html

http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post_21.html

 

Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!