Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

சித்ரகுப்தன்

$
0
0



கருணாநிதியின் ஏட்டை சித்திரகுப்தன் தொலைத்துவிட்டான்.
திமுக தொண்டர்களை சந்திக்க இருக்கிறார் தலைவர்!

எம தர்ம தர்பாரில் கணக்கு முடிக்கிற சித்ரகுப்தன். இவன் தான் மனித ஜென்மங்களின் ஏட்டை வைத்துக்கொண்டு ஆராய்ந்து ஆயுள் கணக்கை முடிக்கிறவன்.



எனக்குத் தெரிஞ்சி ரெண்டு முருக பக்தர்கள். ரெண்டு பேருமே திருச்செந்தூர் முருக தரிசனம் மாதா மாதம் செய்பவர்கள். ரெண்டு பேருமே பரம எதிரிகள்! ’இவன் விளங்காத பய’ என்று அவனும் 
“ வீணாப்போனவன் ” என்று இவனும் ஒருவரையொருவர் பரஸ்பரம் தூற்றிக்கொள்பவர்கள்!

ஒவ்வொரு தடவையும் ஒரு புது பொம்பளையோடு தான் திருச்செந்தூர் போவார்கள். முதல் நாளே போய் ரூம் போட்டு தங்குவார்கள். ‘தெங்கு’வார்கள்! மறுநாள் காலை சன்னதியில் நின்று முருகா முருகா என்று உருகுவார்கள். பக்கத்தில் நிற்கிற புது பொம்பளையும் கண்மூடி பக்தி வெள்ளத்தில் மிதப்பாள். ஒரு தடவயாவது முருகக்கடவுள் “ ஏம்ப்பா… இப்படி கோவிலுக்கு என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் புதுசு புதுசா தள்ளிக்கிட்டு வர்ரீங்களேடா.. இது நல்லாவா இருக்கு..” என்று கேட்க மாட்டாரா?

இந்த ரெண்டு பேர்ல ஒருத்தனுக்கு  சித்ரகுப்தன் மேல பயங்கரமான obsession. தினமும் திரும்பத் திரும்ப சித்ரகுப்தன பத்தியே பேசிட்டே இருப்பான்.

சிலருக்கு தாங்கொண்ணா துயரம், இழிவு, சிறுமை கண்டு புழுவாய்த் துடிப்பார்கள். ஏன்?

’ஏன்னா அவிங்க ஏட்டை கையில் எடுத்து பார்த்துக்கொண்டிருக்கிறான் சித்திர குப்தன். வச்ச கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறான். ஆயுள் பங்கம் இல்லைன்னாலும் 30 வயதிலிருந்து, 40 வயதிலோ, 50 வயதிலோ எல்லா வயதிலும், எந்த வயதிலோ நொம்பலப்பட்டுக்கொண்டு இருக்கிறாங்கென்னா இவனுங்க ஏட்டை கையில் எடுத்து உத்துப் பாக்கிறான்னு அர்த்தம். சித்திரவதை தாங்க முடியாது.

யாரெல்லாம் நல்லா இருக்கானோ அவன் ஏடு சித்திர குப்தன் கையில சிக்கலன்னு அர்த்தம். அதெ போல ஒருத்தன் சாவு தள்ளிப்போனால் சித்ரகுப்தன் அவன் ஏட்டை நிச்சயமா தொலைச்சிட்டான்.’

இந்த ஃப்ராடுக்கு நகைக்கடை வியாபாரத்தில் தன் யுக்தி பலிக்கவில்லை என்றால்
புலம்பல் இப்படித்தான் ‘ சித்ரகுப்தன் என் ஏட்டை கையில எடுத்துட்டான். நிம்மதியே இல்ல. எனக்கு வாச்சவ சரியில்ல. எங்கப்பன உதைக்கப் போறென்.’ 

சரியான சாமியார் பைத்தியம். சாமியார்களை தேடி அலைவான். சித்தர், புதையல் ஏக்கம் தான்.
இந்த சித்ரகுப்தன் கதை கூட எவனாவது சாமியார் தான் இவன் கிட்ட சொல்லியிருப்பான். 

அப்போது நான்தந்தபெருந்தொகைக்குபலமாதங்களாகஇந்தநகைகடைமுதலாளிவட்டிதரவேஇல்லை. முதலும்திரும்பிவரவில்லை.

கேட்கப்போன என்னிடம் இவன் சொன்ன பதில்
"மைனர்வாங்கஉட்காருங்க. ஐயோமைனர்...  
காபி,கூல்ட்ரிங்க்ஸ்சாப்பிடமாட்டேனுபிடிவாதமாஇருக்கீங்களே.  
திருச்சிவயலூர்முருகனைபோய்கும்பிட்டேன். அப்பிடியேசமயபுரம்ஆத்தாளுக்கும்ஒருஅர்ச்சனைபண்ணிட்டேன். கேரளாவிலேஒருவிஷேசமானகோவில்னுசொன்னாங்க. அங்கேயும்போய்என்னஎழவுசெய்யனுமோசெஞ்சிட்டுவந்துட்டேன்பாத்துக்கங்க. ஐயோமைனர்! திருச்செந்தூர்முருகனுக்குஎன்முடி, என்பிள்ளைகள்முடிஎல்லாத்தையும்காணிக்கையாகொடுத்துட்டேன்போங்க...
முந்தாநாள்தினதந்தியிலேஒருவிளம்பரம்.ஒருதாயத்து..ரொம்பவிஷேசமானதாயத்தாம். அதைகையிலவச்சிகிட்டாஅஷ்டலக்ஷ்மியும்கிடைக்குமாம். அதற்கும்மணிஆர்டர்நூறுரூபாஅனுப்பிட்டேன். நான்என்னசெய்யட்டும்நீங்களேசொல்லுங்க. 
சித்திரகுப்தன் என் ஏட்ட கையில எடுத்துட்டான். என் ஏட்டத்தான உத்துப்பாக்கிறான்."

ரோட்டில இவனுக்குப் பிடிக்காத ஒரு வசதியான பெரிய மனிதர் அப்போது போனார். உடனே அசூயையுடன் கத்தினான் “ இவன் ஏட்ட சித்ரகுப்தன் கையில எடுக்க மாட்டேன்றானே. இவன்  ஏட்ட தொலச்சிட்டான்னு நெனக்கிறேன்.”




Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>