Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1852

பாலசரஸ்வதி

$
0
0

நாட்டிய கலைஞர் பாலசரஸ்வதி பற்றி ஒரு அருமையான வாழ்க்கை வரலாறு படிக்க கிடைத்திருக்கிறது. 
“பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்” என்ற நூல்.
தமிழ் மொழிபெயர்ப்பாக க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கிறார். க்ரியா வெளியீடு என்பதே அதன் தரத்திற்கு சான்று.
டக்ளஸ் எம். நைட் என்ற அமெரிக்கர் எழுதிய நூல்.

விசேஷம் என்னவென்றால் இவர் பாலசரஸ்வதியின் மகள் லட்சுமியின் கணவர். இந்த நூலை மறைந்து விட்ட தன் மனைவி லட்சுமிக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
வீணை தனம்மாள் வம்ச பரம்பரையில் வந்தவர் பாலசரஸ்வதி. வீணை தனம்மாளின் மகள் ஜெயம்மாவின் மகள். ஒரு காலகட்டத்தில் தனம்மாள் “ நான் பாலசரஸ்வதியின் பாட்டி” என்று தன்னை அறிமுகப்படுத்தும் நிலை வந்தது.
இந்தியாவின் முதல் நேரு மந்திரிசபையில் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் பாலசரஸ்வதியின் துணைவர். லட்சுமியின் தகப்பனார். லட்சுமி சண்முகம் தான் டக்ளஸ் நைட்டின் துணைவி.
தன்னுடைய 18வது வயதில் பாலசரஸ்வதி தன் வாழ்க்கைத் துணைவராக ஆர்.கே. சண்முகம் செட்டியாரை வரித்துக்கொண்டார்.


........................................





வாலிப சுதந்திர மீறல்
When it's two intelligent teen age girls, it's quirky,funny and rebellious!
Great Dancer Balaasaraswathy and Outstanding singer M.S.Subbulakshmi in their teens!

.....................................

பரதநாட்டியம் பற்றி தி.ஜாவின் 'மலர் மஞ்சம் 'நாவலில் நட்டுவனார் பெரியசாமி சொல்வதாக வருவது : ''ஒருத்தரோடு அவுராத முடிச்சா முடிஞ்சுக்கிட்டு உக்கார்ந்துகிட்டா அப்புறம் இந்த ஆட்டம்,பாட்டம் எல்லாம் ஒரு எளவும் வராது. அப்படியே ஸ்தம்பிச்சுப்போயிரும்...இந்த வித்தையிலே இறங்கறவங்க - ஒன்னு முழுக்கட்டுப்பாட்டோட இருக்கணும், இல்லே கட்டெல்லாம் அறுத்து எரிஞ்சுப்பிட்டு இஷ்டப்படி இருக்கணும். நடுவாந்திரமா இருக்கிறதெல்லாம் சாத்யம் இல்லே. இந்த வித்தை ரொம்ப வேடிக்கையான வித்தை.''

..................

http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post_29.html








Viewing all articles
Browse latest Browse all 1852

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!