Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1923

R.P.ராஜநாயஹம் பற்றி யமுனா ராஜேந்திரன்

$
0
0

ஆர்.பி.ராஜநாயஹம் எழுத்துக்கள் தொகுப்பாக வரவேண்டும் என விரும்பியவர்களில் நானும் ஒருவன். நண்பர்களை முத்தமிட்டு இறுக அணைத்துக் கொள்ளும்போது நம் உடலில் தொற்றும் ஆனந்தமும் ஈரமும் பரவசமும் போன்றது அவரது எழுத்துக்கள். கொஞ்சமாய் வார்த்தைகள். நூறு சொற்களுக்குள் நான்கைந்து அனுபவங்கள். அவரது பதிவுகளின் கடைசி வாக்கியங்களில் அழகையும் ஆச்சர்யத்தையும் அதீதமான அடக்கத்தையும் விலக்கத்தையும் அவர் ஒளித்து வைத்திருப்பார். அவரது எழுத்துக்கள் தொகுக்கப்பட்டிருப்பது இப்போதுதான் எனக்குத் தெரியும். ராஜராஜன் பதிப்பகம் அவரது இரு நூற்களையும் வெளியிட்டிருக்கிறது. அவர் எழுத்தாளர்களின் எழுத்தாளர்.



Viewing all articles
Browse latest Browse all 1923

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>