நேற்றும் இன்றும் மயிலாப்பூர் அபிராமபுரம் ஆல்ஃபபெட் ஸ்கூலில் இருந்து ஐந்தாம் வகுப்பு படிக்கும் மூன்று குழந்தைகள் கூத்துப்பட்டறைக்கு வந்திருந்தார்கள். ந.முத்துசாமியின் ‘ பிரஹன்னளை’ நாடக ரிகர்சல் பார்ப்பது, மற்ற தியேட்டர் விஷயங்களை நேரடியாக தெரிந்து கொள்வது இவர்களுக்கு ப்ராஜெக்ட். இந்த பள்ளியில் முழுக்க கல்வி முறையே Activities தான். Text book என்பதே கிடையாது.
யாத்ரா தனுஷ், சிம்பன் ஆறுமுகம், தருண் ஆகிய மூன்று குழந்தைகள்.
What you would like to become ? என்று நேற்று கேட்டேன். சிம்பன், தருண் இருவருமே “Foot ball player"என்று சொன்னார்கள். யாத்ரா பதில்: “ I have passion for football. But I would like to become an actor."
நான் Che sara, sara Whatever will be will be, The future is not ours to see பாடினேன்.
குழந்தைகள் சந்தோஷமாக கை தட்டினார்கள்.
குழந்தைகள் சந்தோஷமாக கை தட்டினார்கள்.
KIt Kat சாக்லேட் கொடுத்தேன்.
இன்றும் வழக்கம் போல் அவர்களுடைய டீச்சர் ரேகா தான் அந்த மாணவர்களை அழைத்து வந்திருந்தார்.
Rehearsal Process ஐ ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
Rehearsal Process ஐ ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ரேகா சொன்னார். யாத்ராவின் அப்பா தனுஷ். ரஜினியின் பேரன்.
யாத்ராவிடம் 'உனக்கு யார் பிடிக்கும்.'
"லதா பாட்டி. she is my favorite."
தாத்தா பாட்டிகளுக்கு எப்போதும் பேரக்குழந்தைகள் நண்பர்கள். அம்மா அப்பா ‘ நீங்கள் ரொம்ப செல்லம் கொடுக்கிறீர்கள்’ என்று குறைப்பட்டுக்கொள்வார்கள் - நான் சொன்னதும் யாத்ரா அதை ஆமோதித்தான். அம்மா ஐஸ்வர்யா எப்போதும் பாட்டி லதாவிடம் இப்படி வருத்தப்படுவதுண்டாம்.
இன்னொரு பையன் சிம்பன் ஆறுமுகம் மறைந்த முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி ரவி ஆறுமுகத்தின் பேரன். ஆல்பர்ட் தியேட்டர் அதிபர் மது குமரனின் மகன்.
தருணுடைய அப்பா ஒரு பிசினஸ் மேன்.
மூன்று குழந்தைகளுக்கும் இன்று கடைசி தினம் என்பது ரசிக்கவில்லை.
பிரிய மனமில்லாமல் தான் விடை பெற்று சென்றார்கள்.
பிரிய மனமில்லாமல் தான் விடை பெற்று சென்றார்கள்.
..............................................