Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

பாப்பா தெய்வ பாப்பா

$
0
0

கி.ராஜநாராயணன் என்னிடம் சொன்னார் : ’குழந்தைய கவனிச்சிக்கிறதுக்கு பதிலா பிச்சையெடுக்கப்போகலாம்.’
ஆங்கிலத்தில் ஒரு இடியம் உண்டு.
Left holding the baby - அசௌகரியப்படுத்தப்படுவது. கூடுதல் வேலைப்பளுவால் சிரமப்படுத்தப்படுதல்.
கைக்குழந்தைகளை கவனித்துக்கொள்பவர் is made a scapegoat என்கிற அர்த்தம்.
இன்றைக்கு சீனியர் சிட்டிசன்களுக்கு தலை மேல் பாரம் பேரக்குழந்தைகளை கவனித்துக்கொள்வது.
இப்படி கி.ரா.வின் ஒரு சகஹிருதயர் தன் இரு மகன்களும், மருமகள்களும் வேலைக்கு செல்வதால் தானும் தன் மனைவியும் கூடுதல் பளுவால் அனுபவிக்கும் பெருந்துயராக, அவர்களின் கைக்குழந்தைகளை கவனிக்க வேண்டிய பெரும் பொறுப்பைப்பற்றி சொன்னதை என்னிடம் விவரித்தார். ஆயாச பெருமூச்சுடன் அந்த பெரிய மனிதர் ஈனஸ்வரத்தில் நொந்து கொண்டாராம்.
கி.ரா பட்டென்று உடைத்து, வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டாக (அவரிடம் சொல்லாமல்), என்னிடம் சொன்னார்” குழந்தைய கவனிச்சிக்கிறதுக்கு பதிலா பிச்சையெடுக்கப் போகலாம்.”
கிருஷ்ணன் நம்பி எழுதிய ‘விளையாட்டுத்தோழர்கள்’ கதையில்
ஒரு குட்டிப் பாப்பா தான் வில்லன்.
சிறுவன் சங்காவின் இடது கால் குதிரைச் சதையில் பாப்பாவின் ஐந்து பற்கள். அழுந்த நெரித்து இறுக்கிய பிடிவாத பாப்பாவின் பற்கள்.
எழுத்தாளர் சி.ஆர். ராஜம்மா பெற்ற ஒரு பச்சைக்குழந்தை,தாயின் பூ விழுந்த கண்ணை பிய்த்து வெளியே எடுத்து விட்டது.
சும்மா ’சுகமான சுமை’ என்று பீற்றிக்கொண்டு பேரப்பிள்ளைப்பீய அள்ளலாம்.ஆனால் யதார்த்தம் வேறு.
சாரு நிவேதிதா ‘குழந்தைகளை எனக்குப் பிடிக்காது’ என்று ஒரு கட்டுரை எழுதியதுண்டு.
பச்சை குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு கூட செய்யும் தொந்தரவுகள் பற்றி.




Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>