Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1852

காற்று கொட்டுகிற கோபுரவாசல் - 2

$
0
0

வெள்ளை சட்டை பெரியவர் தான் பெரும்பாலும் லெக்சரர்.
டொனால்ட் ட்ரம்ப், மோடியையெல்லாம் அனாயசமாக தன் கண்டிப்பில் நிறுத்தினார். அமித் ஷா பற்றி அவ்வளவு தீர்க்கமான முடிவுக்கு இன்னும் இவரால் வரமுடியவில்லை. ’பின்னால பாத்துப்போம்.’
எடப்பாடி, ஓபிஎஸ், ஸ்டாலின் எல்லோரும் அவருடைய நுனி நாக்கில்.

பேங்க் மானேஜர் இவரிடம் ஒரு கையெழுத்து கேட்டிருக்கிறார். ‘ நான் என் கிரிப்ப விட முடியுமா? முடியாதுன்னேன். ’இல்ல இதுல ஒரு கையெழுத்து கட்டாயம் போடனும்’னார். சரின்னு போட்டேன்.
’இன்னொரு கையெழுத்து உங்க பெண்சாதி போடனும்’னார். எனக்கு பகீருன்னது.
‘அவ கையெழுத்து எதுக்கு. என் கையெழுத்து போதும்’
’இல்ல நாமினி அவங்க தான். கட்டாயம் இதில அவங்க கையெழுத்து வேணும்.’
என்ன செய்ய. வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்காரி கிட்ட “கொஞ்சம் பேங்க்குக்கு வரணுமே’
அவ உடனே வெறச்சிக்கிட்டா.
’எதுக்கு?’
’ஒரு கையெழுத்து போடனும்..’
ரொம்ப சுதாரிப்பா கவனமா ஆயிட்டா “கையெழுத்தா?”
“ஆமா, ஒன் கையெழுத்து”
ஒடனே “ நா மாட்டேன்.. நா கையெழுத்தல்லாம் எங்கயும் போட மாட்டேன்”
பிடிவாதமா ’முடியவே முடியாது’ன்னுட்டா. பாத்துக்க.
’ஒன்னய நம்பி நா எதுலயும் கையெழுத்து போடவே மாட்டன்’னு நின்ன நெலயில நின்னுட்டா.’
அவ்வளவு தான் வீட்டுல உள்ளவ குடுக்கற மரியாத.
அடுத்து பேச்சை ரசித்து கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் பற்றி வெள்ளை சட்டைக்காரர் மற்றவரிடம் சொன்னார்.
’தென்காசில எங்க, என்ன, எந்த கடையில ருசியாயிருக்கும்னு இவனுக்குத் தான் தெரியும், பாத்துக்க. எங்க இட்லிக்கு பொடி நல்லாருக்குன்னு பாத்து தான் நொழயிறான். தோச எங்க நல்லாருக்கும். சாம்பார் எங்க, ரசம் எந்த கட, எந்த பலகாரம் எங்க ருசியாருக்கும்’னு அத்துப்படி.’
ரசிகரான பெரியவர் “ ஆமா, இதிலென்ன இருக்கு. குடுக்கற காசுக்கு பெலன் வேண்டாமா? சும்மா காச தூக்கி குடுத்துட முடியுமா? “
அந்த தென்காசி கோயில் கோபுர வாசல் காற்றின் சுகம். சென்னப்பட்டணம் வந்த பின்பும் மறக்கவே முடியவில்லை.

https://rprajanayahem.blogspot.com/2019/08/blog-post.html


Viewing all articles
Browse latest Browse all 1852

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>