அவள் அப்படித்தான் வசனத்தில் பங்கு சோமசுந்தரேஷ்வருக்கும்
( கே.ராஜேஷ்வர்) அனந்த்துவுக்கும் தான். வண்ண நிலவன் சிறு பகுதி. ருத்ரய்யாவின் பங்கு கொஞ்சமும் கிடையாது.
( கே.ராஜேஷ்வர்) அனந்த்துவுக்கும் தான். வண்ண நிலவன் சிறு பகுதி. ருத்ரய்யாவின் பங்கு கொஞ்சமும் கிடையாது.
கதை ராகமஞ்சரி என்று டைட்டிலில் அப்போது வந்தது உண்மையில் ராகமஞ்சரி என்று யாருமே கிடையாது.
இப்போது மறைந்த அருண்மொழி இந்த படத்தின் அசோசியேட் டைரக்டர் என்றெல்லாம் அபத்தமாக எழுதப்படுகிறது. உண்மை என்னவென்றால் இந்த படத்துக்கு ஒளிப்பதிவில் உதவியாக இரண்டு பேர். கேமரா நல்லுசாமிக்கும் ஞானசேகரனுக்கும். அவர்களுக்கு அஸிஸ்டெண்ட்கள் இருவரில் ஒருவராக அருண்மொழி இருந்தார். அவ்வளவு தான். அவர் அந்தப் படத்தில் உதவி இயக்குனர் கூட கிடையாது.
ருத்ரய்யாவின் கிராமத்து அத்தியாயம்
படு தோல்வியடைந்த படம்.
அந்த படத்தில் கே.ராஜேஷ்வர் கிடையாது.
படு தோல்வியடைந்த படம்.
அந்த படத்தில் கே.ராஜேஷ்வர் கிடையாது.
கமல் ஹாசனை வைத்து ’யாரோ பார்க்கிறார்கள்’ என்று ருத்ரய்யா ஒரு படம் தயாரிக்க இருந்தார். கே.ராஜேஷ்வர் தான் அதன் ஸ்க்ரிப்ட், வசனமெல்லாம்.
சுஜாதாவின் “ இருபத்தி நான்கு ரூபாய் தீவு” தான் ’யாரோ பார்க்கிறார்கள்’.
சுஜாதாவின் “ இருபத்தி நான்கு ரூபாய் தீவு” தான் ’யாரோ பார்க்கிறார்கள்’.
அந்தப்படம் மேலெடுக்க முடியாமல் நின்று போனது.
ரகுவரனை வைத்து கே.ராஜேஷ்வர் ’வீதியெல்லாம் பூப்பந்தல்’ என்று ஒரு படம் இயக்கும் முயற்சி (’ஏழாவது மனிதன்’ தயாரிப்பில் இருந்த போது)
நிறைவேறாமல் போயிருக்கிறது.
நிறைவேறாமல் போயிருக்கிறது.
கடந்த காலங்களில்
கடலோர கவிதைகள் துவங்கி, வெற்றி விழா, கோவில் பட்டி வீரலட்சுமி வரை தொடர்ந்த பல படங்களில் பங்காற்றிய அற்புத மனிதர் ராஜேஷ்வர்.
கடலோர கவிதைகள் துவங்கி, வெற்றி விழா, கோவில் பட்டி வீரலட்சுமி வரை தொடர்ந்த பல படங்களில் பங்காற்றிய அற்புத மனிதர் ராஜேஷ்வர்.
அமரன் என்ற பிரமாண்ட பட இயக்குனர்.
சந்திரபாபு கதையை படமாக்கும் முயற்சியில் இப்போது ராஜேஷ்வர். இன்னும் பல ப்ராஜெக்ட்ஸ்.
கே.ராஜேஷ்வர் எழுதியுள்ள சந்திரபாபு நாவல் எனக்கு சென்ற ஜனவரியில் அனுப்பியிருந்தார். ஒரே மூச்சில் படித்தேன். படமாக வேண்டிய அருமையான ஸ்கிரிப்ட்.
என்னிடம் பேசும் போது ஒரு விஷயம் சொன்னார்.
“ எனக்கு கவிஞர் வைரமுத்து சொன்னதை நான் உங்களுக்கு கடத்துகிறேன். ‘ உங்கள் வெற்றி தாமதப்படலாம். ஆனால் தவிர்க்க முடியாதது’ “
“ எனக்கு கவிஞர் வைரமுத்து சொன்னதை நான் உங்களுக்கு கடத்துகிறேன். ‘ உங்கள் வெற்றி தாமதப்படலாம். ஆனால் தவிர்க்க முடியாதது’ “
வைரமுத்து தனக்கு சொன்னதை ராஜநாயஹத்துக்கு தருகிறார்.
காலம் கனியும்.
..................