சென்ற வருடம் டிசம்பரில் ஒரு நாள் நடிகர் நாசர் அவர்களுடன் மொபைலில் நான் பேச வேண்டியிருந்தது.
என்ன, 'சினிமாவில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?'என்பதற்காக தான்.
இது மாதிரி சந்தர்ப்பங்களில் பிரபலத்திடம் வேறு விஷயங்களும் கூட 'பேக்கு'மாதிரி பேச வேண்டியிருக்கும்.
"சார், ஸ்பேசஸ்ல ஒரு நாடகம் பாக்கும் போது, நான் உங்க பக்கத்தில ஒக்காந்திருந்தேன். ஒங்க சட்டையில, காலர் பக்கத்தில ஒரு பூச்சி. நான் அத தட்டி விட்டப்ப நீங்க திரும்பி என்னன்னு கேட்டீங்க? நான் 'பூச்சி'ன்னேனே"
நாசர் : அப்படியா?
"சார், ந.முத்துசாமி இறந்த போது நீங்க கூத்துப்பட்டறை வந்திருந்தப்ப உங்களோட பேச முடியாமல் போயிடுச்சி "
நாசர் : ஓ
"ரெண்டு மாசம் முன்னால அருண்மொழியோட நீங்க ஒங்க வீட்டுக்கு பக்கத்தில டீ சாப்பிட்டுக்கிட்டு இருந்தப்ப, உங்கள பாத்துட்டு வந்தேன். அருண்மொழி உங்களுக்கு 'ராஜநாயஹம்'னு அறிமுகப்படுத்துனாரே"
"அப்பறம் உங்க வீட்டுக்கு வந்தேன். நீங்க அப்ப இல்ல. நான் எழுதின புத்தகங்கள் நீங்க பார்க்க குடுத்துட்டு வந்தேன். "
நாசர் : ஓஹோ
இப்படியெல்லாம்"பூவாளுர் சந்தையில ஒங்க பொட்டியும் என் பொட்டியும் இடிச்சிண்டதே, ஞாபகமில்லையா"பாணியில அவர மன்றாடிப் பார்த்தேன்.
"ஆதாம் ஏவாள் மொறப்படி நம்ம ரெண்டு பேரும் சொந்தம், சார் "ன்னு தான் இனி சொல்ல வேண்டியிருக்குமோ? ன்னு ஆகி விட்ட வேளையில் சட்டென்று ஒரு விஷயம் நினைவுக்கு வந்து விட்டது.
"ஆங்.. சார், இப்ப இந்த தீபாவளி மலர்ல நீங்க லாரி பேக்கர் பத்தி எழுதியிருந்தீங்கள்ள? "
நாசர் சற்று இளகி "ஆமாம் "
"இதே தீபாவளி மலர்ல நான் எஸ். வி. ரங்காராவ் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கேன் சார் "
நாசர் : லாரி பேக்கருக்கும், எஸ். வி. ரங்காராவுக்கும் என்ன சம்பந்தம்??"
...