'நிலையான அமைதி தேடும் மனித மனத்தின் சிறு அலைகள்'
நேர்த்தியான வார்த்தைகள்.
"மா. அரங்கநாதன் படைப்புகள் வெறும் இலக்கியமாக நின்று விடுவதில்லை. உண்மையில் அவை நிலையான அமைதி தேடும் மனித மனத்தின் சிறு அலைகள் "
அசோகமித்திரனின் கணிப்பு.
மா. அரங்கநாதனின் 'தேட்டை'சிறுகதை
காட்டும் காட்சி.
'நான் இவரோடு வாழ மாட்டேன் 'உதறி விட்டு
இங்கே பாண்டிச்சேரி வந்து சமையல் வேலை செய்து காலம் தள்ளும் அந்த நாகம்மாவை பார்த்து விட தேடிக்கொண்டு வரும் அத்தை என்றழைக்கப்படும் மூதாட்டி
'ஒன்னக் கட்டிக்கிட்டதாலே எனக்கு இந்த நிலை 'என்ற கணவனையும், பெற்ற மகனையும் விட்டு விலகிய நாகம்மா,
யாருமில்லை - ஒன்றுமில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டால் -
அவ்வாறு உணரப்பட்டு விட்டால் - இன்னொன்று வருவதற்கு வழி வகை ஏற்படும் என்கிறார்
மா. அரங்கநாதன்.
பல கதைகள் இந்த வட்டத்துக்குள் தானே சுழலும்.
ஆனால் இதில் வெகு இயல்பாக தலை காட்டும் அந்த முத்துக்கறுப்பன் ஸ்டோர்ஸ்
பலசரக்கு கடைக்காரர் மூலம்
ஒரு அற்புத தரிசனம்.
இந்த அபூர்வம் தான் மகத்தான மா. அரங்கநாதன்.
அரங்கநாதன் கதைகளில் தொடர்ந்து வரும் முத்துக்கறுப்பன் யார்? என்று கேட்டால்
"என்னால் விளக்கிச் சொல்ல முடியாத சில உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவதற்கு உதவி செய்கிறவன் முத்துக்கறுப்பன்."
என்று தான் சொன்னார்.
அஸ்திரம் தான் முத்துக்கறுப்பன்.
மற்றவரைப்பற்றி கவலைப்படுபவர் இல்லை என்று சொல்லி விட முடியாது.
நிராதரவும் சக்தி படைத்த ஒன்று தான்.