கீழே நின்று ஏன் கல்லெறிகிறாய். மேலே வந்தால் நீயே பறித்துக் கொள்ளலாமே, ?!
- கலாப்ரியா
சொலவடை - ஒரே கல்லு, ரெண்டு மாங்கா
கல்லெறியும் கெட்டவனின்
நோக்கம் களவு.
கல்ல விட்டமா, பொறக்குனமா, ஓடுனமான்னு பரபரக்கும்போதே ,
பிடிச்சி மாத்த குடுத்து கட்டி வச்சிடுவாங்கெளே.
இதுல எங்கன அவன் சாவகாசமா மேல ஏறி, பறிச்சி...
மரம் ஏறுவதும் திறன் சம்பந்தப்பட்டது.
அதுலயும் இந்த காலத்தில
hard work தேவையில்ல. Smart work தான்.
ஓ. ஏ. கே. தேவர் வில்லத்தனமான
குளோஸ் - அப் டயலாக் 'நான் யார் தெரியுமா?'வில்
"ஒரே கல்லு, நாலு மாங்கா "
இன்னொரு படத்தில் தேங்காய் சீனிவாசன்
தன் பாணி கொனஷ்டையுடன்,
வார்த்தைகளை அழுத்தி சொல்வது
"ஒர்ரே கல்லு, ஏர்ராளமான மாங்க்கா "
இன்னொரு சொலவடை உண்டும்.
காய்ச்ச மரம் கல்லடி படும்.