Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1880

உதயநிதி ஸ்டாலின்

$
0
0
இன்று உதயநிதி ஸ்டாலின் என்னிடம்
 செல் பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். 
'சினிமா எனும் பூதம் இப்போது தான் படித்து முடித்தேன். உடனே உங்களிடம் பேசுகிறேன். '

'இயக்குநர் கரு. பழனியப்பன் மூலம் தான் உங்கள் புத்தகம் பற்றி தெரிய வந்தேன். புத்தகத்தை பற்றி உங்கள் எழுத்தையே அவர் டிவிட்டரில் வெளியிட்டிருந்ததை பார்த்தேன்.' 

பழனியப்பன் தான் புத்தகத்தை கொடுத்தார். 

Credit goes to Karu. Palaniappan. 

புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரை பற்றியும் கோடிட்டு காட்டி 'உங்களால் இப்படி எவ்வளவு விஷயங்கள் பற்றி எழுத முடிந்திருக்கிறது' 

எந்த ஆயத்தமும், தயாரிப்புமின்றி நான் எழுதியிருக்கிறேன் என்பதை அவர் கண்டு பிடித்து பேசினார் என்பது அவருடைய வாசக மேன்மையை உணர்த்தியது. 

சினிமா எனும் பூதம் நூலில் படிக்கும் போதே குறிப்பெடுத்து அந்தந்த நடிகர்கள் புகைப்படங்களை கூகுளில் தேடியிருக்கிறார். 

'அவர்களுடைய புகைப்படங்களை சினிமா எனும் பூதத்தில் நீங்கள் இடம் பெறச்செய்திருக்கலாமே'என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

ராஜநாயஹத்தின் சினிமா எனும் பூதம்
 படித்ததன் மூலம் 
சில படங்களை பார்க்க வேண்டும் என்று குறித்து வைத்திருப்பதாக சொன்னார். 

உதயநிதி ஸ்டாலின் நடிப்பு எனக்கு பிடிக்கும் என்பதை 2014 ஆம் ஆண்டிலேயே 
என் பதிவொன்றில் எழுதியவன் நான். 
இப்போது கூட மிஸ்கின் 'சைக்கோ'வில் உதயநிதியின் பெர்ஃபெக்ட் பெர்ஃபாமன்ஸ் பற்றி எழுதியிருந்தேன். 

டெலிபதி மாதிரியிருக்கிறது. 

புத்தகத்தின் ஒரு ஆர்ட்டிக்கிள் மூலம் 
'தி. மு. க சட்டத்துறை தலைவர்'என் உறவினர் என்பதை தெரிந்து கொண்டு கேட்டார். 
'சண்முக சுந்தரம் உங்கள் உறவினரா? '

ராஜநாயஹத்தின் மற்ற புத்தகங்கள் படிக்க கிடைக்குமா? உதயநிதியின் ஆவல். 

ஸீரோ டிகிரியில் நான்கு நூல்கள் பிரசுரத்திற்காக 2018லேயே கொடுத்திருக்கிறேன். அவை வெளி வரும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். 


'அண்ணே, அண்ணே'என்று இயல்பாக பேசிய உதயநிதி அன்புக்கு நெகிழ்கிறேன். 

கரு. பழனியப்பன் என்ற அபூர்வ மனிதருக்கு எங்கனம் சம்பிரதாயமாக நன்றி சொல்ல முடியும்? 

 அன்பும் அனுசரனையும் 
கொட்டி கிடக்கிறது. 

"மனிதனின் கைக்கு எட்டும் படி 'தற்செயல்'என்கிற ஒரு விசேஷமான சிலு சிலு ஓடை

கைகளை அந்த ஓடைக்குள் செலுத்தினால்
 இரு கைகளிலும் அதிசய அற்புதங்கள் சிக்கும் "

- ரே பிராட்பரி

Viewing all articles
Browse latest Browse all 1880

Latest Images

Trending Articles


71வது சுதந்திர தினம் நற்பண்புகளால் இந்திய நாட்டை கட்டி எழுப்புவோம் : கவர்னர்,...


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினான்கு - ஆதி வெங்கட்


வேதம் புதிது - கபிலரும் பாரதிராஜாவும்


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 204 - அகத்தியர் அறிவுரை - 20


ஸ்ரீ நாக நாத சித்தர் வரலாற்று சுருக்கம் - ஆத்ம ஜோதி இதழ்


படர்ந்தபடி யோசித்தல் –குழந்தைகளுக்காக


பெருங்கதை


ஆஸ்திரேலியாவில் ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் ஆலயம் - குகையில் இருக்கும் அதிசய...


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>