Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

புதிய கூண்டு

$
0
0





வைகோ பெரியாரின் பிரமாண்ட படத்தை வீட்டில் வைத்திருக்கிறார்.
வைகோவின் மகன் துரை வையாபுரியின் மனைவி கோவிலுக்குப்போவார். வைகோவின் ஒரு மூத்த சகோதரி dedicated chriistion. மகள்களில் ஒருவர் கிருஸ்தவராகவே மாறிவிட்டார். கணவர் பெயர் ஜான் புஷ்பராஜ்.
ஜீன் மெஸ்லியரின் மரணசாசனம், பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் ‘ நான் ஏன் ஒரு கிருஸ்தவனல்ல?’ போன்ற கிருஸ்தவத்திற்கு எதிரான நூல்களை மொழி பெயர்க்கச்சொல்லி பெரியாரே பதிப்பித்திருப்பதை வைகோ அறியாதவரல்ல.
கருணாநிதியின் துணைவியார் ராசாத்தியம்மாளும், துர்காஸ்டாலினும் கோவிலுக்குப் போவதையே முக்கிய வேலையாகக் கொண்டவர்கள்.
கருணாநிதியின் குடும்பத்தில் கிருஸ்தவம் நுழைந்திருக்கிறதா? சொல்லமுடியாது. திடீரென்று கனிமொழியே கூட பெந்தகோஸ்ட் பிரச்சாரம் செய்யக்கிளம்பினாலும் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

கோவில் கோவிலாக ஏறி இறங்கும் மன்னார்குடி குடும்பங்கள்.
திடீரென்று ஆவியானவரால் ஆசீர்வதிக்கப்பட்டு சசிகலா வெள்ளையுடை உடுத்தி பைபிளை எடுத்துக்கொண்டு “ ஏ,பாவிகளே! விரியன் பாம்புக்குட்டிகளே!” என்று கூவினால் பிரமிக்க வேண்டியதே இல்லை. 
ஆட்டோ சங்கர் தூக்கில் இடப்படுவதற்கு முன் பைபிளை படித்து மதம் மாறி விட்டாராம். 
தூக்கிலிட்ட பின் ஆட்டோ சங்கருக்கு நாமம் போட்டிருந்தார்கள்.
அவர் மனைவி இன்று அல்லேலூயா பிரச்சாரகர்.

கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் இப்போது பெந்தகோஸ்ட் கிறிஸ்டியன் என்று சொல்லப்படுகிறது. சாருஹாசன் பிரசங்கம் செய்யும் D.V.D  வேண்டுமா என்று ஒரு கிருஸ்தவர் என்னிடம் நூல் விட்டுப்பார்த்தார். எனக்கெதற்கு? மறுத்து விட்டேன்!
சாருஹாசன் மதம் மாறியது பொய் என்றால் இப்படி ஒரு வதந்தி எப்படி பரவியது?ஒரு பிராமணன் கிருத்துவனாக மாறுவதாக “அஸதோமா சதகமயா”  படத்தில் அவர்  நடித்ததால் பரவி விட்டதா? 
'எனக்கு இன்னும் தெய்வ நம்பிக்கையே வரவில்லை
அதற்குப்பின் தானே மதம் மாற வேண்டும்' - இப்படி சாருஹாசனே சொல்வதால் அவர் மதம் மாறியதாக பரவிய செய்தி வதந்தி தான் என்று தான் தெரிகிறது.
கமல்ஹாசன் பற்றி கே.பாலச்சந்தர் “ அவன் நாத்திகனாகவே இருந்து விட்டுப்போகட்டும். ஆனா இதையே ஏன் எப்பவும் சொல்லிக்கிட்டே திரியறான்?”
ஆத்திகப்பிடிவாதம்,மத வைராக்கியம் போல நாத்திக வைராக்கிய பிடிவாதமும் கூட ஒரு ‘கூண்டு’ தான்.

போன மாதம் மூன்றாம் வகுப்பில் படிக்கும் அபிநயா என்னிடம் அழுதாள் “My auntie has met with an accident and she is now in an hospital”
 நான் அவளை சமாதானப்படுத்தினேன் Let us pray for her!” 
குழந்தைகள் அனைவரும் கண் மூடி கை கூப்பி நான் சொன்னதை திருப்பிச் சொன்னார்கள் Oh God! Our Abinaya’s auntie should get well soon!”
அபிநயா சந்தோஷமாகிவிட்டாள்.
அடுத்த வாரம் அவளுடைய அம்மாவின் சகோதரி குணமாகி வீட்டிற்கு வந்தபோது வீட்டில் பெருமையாக “ எங்க க்ளாஸில  நாங்க எல்லோரும் ராஜநாயஹம் சார் கூட சேர்ந்து ப்ரேயர் செய்தோம்.”
அவள் க்ளாஸுக்கு நான் மறுபடி போனபோது என்னிடம் சந்தோஷமாக ஆண்ட்டி குணமான விஷயத்தை சொன்னாள்.  
I love the way of grace!

அந்தக்காலத்தில் டாக்டர் கி.வேங்கடசுப்ரமண்யத்தின் Cousin   ஜெஸ்விட் பாதிரியார் லாரென்ஸ்.
வெள்ளைக்காரன் காலத்திலேயே திருநெல்வேலியில்  நான்கு பிராமணக்குடும்பங்கள் கிருஸ்தவ மதத்தை தழுவி விட்டார்கள்.
புதுமைப்பித்தன் கிருஸ்தவ மதத்தின் ஊடுறுவல் பற்றி பிரமாதமான ஒரு கதை எழுதியிருக்கிறார். அந்தக்கதை “புதிய கூண்டு” ஆஹா என்ன ஒரு தலைப்பு. என்ன அழகாக மதமாற்றம் பற்றி ஆறே எழுத்தில் சொல்லிவிட்டார்.

என்னுடைய உறவினர் தம்பதியரை பல வருடங்களுக்கு முன் ஒரு முறை சமயபுரம் கோவிலில் சந்தித்தேன்.
“மருமகனே! மாரியம்மா ஆயிரம் கண்ணுடையாள்! சக்தி வாய்ந்த தெய்வம்!” என்றார் அந்த தூரத்து அத்தை. ஆறு மாதத்தில் திருச்சியில் என்னிடம் “அய்யா! மருமகனே! சொன்னாக்கேளுங்கய்யா. ஏசப்பாவை நம்புங்க. ஏசு தான்யா உண்மையான தெய்வம்.” அந்த தம்பதியர் தீவிர கிறிஸ்தவர்கள் ஆகியிருந்தார்கள்! வைகோவின் வார்த்தைகளில் சொல்வதானால் dedicated christians!
 
‘மகமாயி மகமாயி’ என்று புலம்பிய ஏ.வி.எம் ராஜன் தானே ஏசுவின் அடிமை!
தி.மு.க பேச்சாளர் குமரி முத்து அதோடு கிறிஸ்தவ பிரச்சாரகரும் கூட. இவருடைய அண்ணன் நம்பிராஜன்.அண்ணி தாம்பரம் லலிதா. நடிகை அம்பிகாவை “அவன் இவன்”, “ஜிகர்தண்டா” படங்களில் பார்த்தபோது யார் சாயலோ தெரிகிறதே எனத்தோண்றியது. ஆங்! வயதானவுடன் அம்பிகா இப்போது தாம்பரம் லலிதா போலத்தெரிகிறார். ஷோபா நடித்த “பசி”யில் தாம்பரம் லலிதாவைப் பார்த்த மாதிரியே தான் அம்மா அம்பிகா இருக்கிறார்.
ஜூனியர் பாலையா மாலை போட்டு என்னிடம் சபரிமலை ஐயப்பன் பெருமை பேசியது இன்னும்  நினைவிருக்கிறது.அவர் இப்போது பெந்தகோஸ்ட் கிறிஸ்டியன்.
அருந்ததிய இனமக்களை மட்டும் கிருஸ்தவம்  நெருங்க முடிந்ததில்லை.அதாவது அவர்களை Convert செய்ய முடிந்ததில்லையாம். இதைப்பற்றி அறிய வந்த போது அந்த இனத்தின் மீது மிகுந்த மரியாதை ஏற்படுகிறது.
"சைத்தான்கள்.. ஞானியாக ஏசப்பா இவர்களை தெரிந்தெடுக்கவில்லை.அஞ்ஞானிகள்"என்று கிறித்துவ பாதிரிகளும் பிரச்சாரகர்களும் சலித்து சாபமிட்டிருப்பார்கள்!
வறுமையில் உள்ளவர்களை சுலபமாக மதமாற்றம் செய்யமுடியும்.

பொருளாதார வீழ்ச்சியடைந்தவர்கள்,பெரும் நம்பிக்கை துரோகங்களை சந்தித்தவர்கள், நோயாளிகள், சிறைக்கைதிகளில் ஆயுள் தண்டனை, மரண தண்டனை பெற்றவர்கள்,கோர்ட்,கேஸ்,சிறை என்று நொம்பலப்படுபவர்கள், பெரும் துயரத்தில் இருப்பவர்கள். மனம் இவர்களுக்கு மிகவும் பலகீனமாக இருக்கும். இவர்களை சுலபமாக மதமாற்றம் செய்ய இயலும்.



..............................................................................................

http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post_21.html

http://rprajanayahem.blogspot.in/2012/05/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post_26.html

http://rprajanayahem.blogspot.in/…/ailing-popes-are-not-unu…

http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_9.html

http://rprajanayahem.blogspot.in/…/christ-never-laughed.html



.....................................


Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>