ஆதித்யா ராஜ் கபூர்.
ஷம்மி கபூரின் மகன். கீதா பாலிக்கு பிறந்தவர்.
கபூர் வம்ச பரம்பரையில் ஓரளவு கூட அறியப்படாதவர் ஆதித்யா கபூர்.
ராஜ் கபூரின் பிள்ளைகள் ரண்திர், ரிஷி இருவரும் ஊரறிந்த இந்தி நடிகர்கள்.
மூன்றாவது மகன் ராஜீவ் அப்பா இயக்கிய 'ராம் தேரி கங்கா மெய்லி'யில் கதாநாயகனாக நடிக்கும் முன்னரே ஹீரோவாக நடித்திருக்கிறார்.
ஒரு நான்கு படங்களிலாவது மொத்தமாக 'கதாநாயகன் வேலை'பார்த்திருக்கிறார்.
சசி கபூர் பிள்ளைகள் வெள்ளைக்கார பெண்மணிக்கு பிறந்தவர்கள்.
குணால் கபூர் பொண்டாட்டி கிட்ட கேட்டீங்கன்னா
'என் புருஷனும் கச்சேரிக்கு தான் போனாரு'ன்னு தான் சொல்லுவா. ஸ்க்ரீன் ஆக்டர் தான். கதாநாயகனாக மூன்று படம் நடித்தும்,
ஜ்வலிக்க முடியவில்லை.
சசி பெற்ற இரண்டாவது மகன் கரண் மீது நிறைய எதிர் பார்ப்பு இருந்தது. இந்தி திரையுலகில் பெரிய ரவுண்டு வருவான் பையன்னு நெனச்சாங்க.
நானும் நடிகன் தான்னு இப்பவும் சொல்வாரு.
கதாநாயகனா நடிச்சிருக்கலாம் . அந்த படம் பற்றி கூகுள்ள தான் தேடனும். அட்வர்ட்டைசிங் மாடலா இந்தியா பூரா கரண் கபூர் பிரபலமாக முடிந்தது.
Photographer.
ஆங்கிலோ இந்திய சமூகம் பற்றி கரண் ரிசர்ச் செய்ததுண்டு. பல பத்திரிக்கைகளில் எழுதிய எழுத்தாளர்.
மகள் சஞ்சனா கபூர் அவ அம்மா போல தியேட்டர் பெர்சனாலிட்டி. பிரிட்டிஷ் நடிகைன்னும் சொல்லிக்குவா.
ஷம்மி கபூர் மகன் ஆதித்யா ராஜ்கபூர் - the less discussed Kapoor.
ராஜ் கபூரின் பாபி படத்தில் ரிஷி ஹீரோ.
ஷம்மி மகன் ஆதித்யா ராஜ் கபூர் பாபியில் அசிஸ்டெண்ட் டைரக்டர்.
ரிஷியும், ராஜீவும் இருவரையுமே கதாநாயகனாக நடிக்க வைக்கும் முன் ராஜ் கபூர் தன் படங்களில் உதவி இயக்குநர் வேலை செய்ய வைத்திருக்கிறார்.
ஆதித்யா ராஜ் கபூர் தன் பெரியப்பா இயக்கி சித்தப்பா நடித்த சத்யம், சிவம், சுந்தரம் படத்திலும்
உதவி இயக்குநர் வேலை பார்த்தவர்.
மதுரையில் அந்தக் காலத்தில் ஷம்மி கபூருக்கு பிள்ளையில்லை என்றே மொட்டயன், குருவி மண்டையன், கம்பு கூட்டன், ஆட்டு மூக்கன், தொல்லை எல்லோருமே கபூர் ஃபேமிலி பற்றி பேச்சு வந்தாலே "பாவம்யா, ஷம்மி கபூருக்கு தான் பிள்ளயில்ல"என்று பரிதாபப் பாடுவதுண்டு.
ஒரு தடவ உதார் சட்டி மண்டையன் "ஷம்மி கபூர் மகன் பேரு கம்மி கபூர்"ன்னு அள்ளி விட்டப்ப
"அவனுக்கு மகனே கிடையாதுடா"ன்னு
சீரியசா கம்பு கூட்டன் கட்டி உருண்டுட்டான்.
..
புகைப்படங்கள்
1. ஷம்மி கபூர் மகன் ஆதித்யா ராஜ்கபூருடன்
2, 3, 4. ஆதித்யா ராஜ் கபூர்
..
https://m.facebook.com/story.php?story_fbid=2694927457387370&id=100006104256328
https://m.facebook.com/story.php?story_fbid=2715973568616092&id=100006104256328