ராஜநாயஹத்திற்கு கிரா கடிதம் - 2
ஆத்ம அன்பருக்கு,
நலமாகுக.
உங்கள் முகவரி மாற்றக் கடிதத்துக்கும் பதில் கடிதமாக இந்த எனது முகவரி மாற்றக் கடிதம் வருகிறது.
எப்படி இருக்கிறீர்கள்.
எப்பவாவது திடீரென்று உங்கள் ஞாபகம் வரும்.
என்னோடு வந்து பழகியவர்களில் நீங்கள் ஒரு வித்தியாசமானவர் தான்.
நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அனுபவங்கள் புதைந்து கிடக்கிறது உங்களிடம்.
அதே பேச்சை நீங்கள் எழுத்தில் கொண்டுவர ஆரம்பித்து விட்டால் நாங்களெல்லாம் கதையைக் கட்ட வேண்டியது தான்.
கதை எழுத வேண்டுமென்றில்லை, அனுபவங்களை சுவாரஸ்யமாக - எழுத்தில் - சொன்னாலே போதும்.
நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக ஒரு வித ஜாலக்கோடு சொல்ல வேண்டும், அவ்வளவு தான்.
அது கிடக்கு.
உங்கள் பையன் - மூடி மூடிச் சிரிப்பானே - அவன்
எப்படி இருக்கிறான்?
கிரா
9 - 11- 91
....
https://m.facebook.com/story.php?story_fbid=2832278793652235&id=100006104256328