சமீபத்திய சந்தோஷம். அதிஷா வினோத்
செல் பேசியில் பேசினார்.
என்னுடைய 'சினிமா எனும் பூதம்'நூலை படித்து அது பற்றி மிக உயர்வாக பேசினார்.
ராஜநாயஹம் எழுத்து அவருக்கு மருந்து போல இருப்பதாக, உற்சாகமடைய வைத்ததாக அபிப்ராயப் பட்டார்.
இதே போல வாசுகி பாஸ்கர் முன்பு
'மன ரீதியாக தொந்தரவுக்கு உள்ளாகி எதைதையோ சிந்தித்துக் கொண்டிருந்த போது புத்தகம் கைக்கு கிடைத்தது. முற்றிலும் புதியவொரு அனுபவத்துக்காக படிக்கத் தொடங்கினேன், Rejuvenate என்று சொல்வார்களே, அது போல பேரனுபவம்'என்று
ராஜநாயஹம் எழுத்து பற்றி எழுதியிருக்கிறார்.
அதிஷா 'சினிமா எனும் பூதம் படிக்கும் போது சுலபமாக ஒவ்வொரு பகுதியையும் சுலபமாக கடந்து செல்ல முடியவில்லை. நிறைய refer செய்ய வேண்டியிருக்கிறது. நிறைய கவனம் தேவைப்படும் நூல்'என்று சொன்ன போது,
ஒரு தலை சிறந்த பத்திரிக்கையாளரின்
பாராட்டு மழையில் நனைந்த அனுபவம்
சிலிர்ப்பாக இருந்தது.
அதிஷா தகப்பனார் இல்லாமல் வளர்ந்த பிள்ளை.
என்னை அப்பா போல உன்னத மதிப்பு கொடுத்து கௌரவிப்பதாக அவர் மனம் திறந்து
சொன்னதை குறித்து
மிகுந்த மன உருக்கம் கொள்கிறேன்.
https://m.facebook.com/story.php?story_fbid=2771611203052328&id=100006104256328
https://m.facebook.com/story.php?story_fbid=2771611203052328&id=100006104256328