கரு. பழனியப்பன் தமிழா, தமிழா
ஒவ்வொரு ஞாயிறும் Zee தமிழ்
பகல் 12 மணி சுவாரசியம்.
கரு. பழனியப்பன் நல்ல விறுவிறுப்பாக நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார்.
27.09.2020 தமிழா தமிழா நிகழ்ச்சி
பார்த்துட்டு இருந்த போது
இளமை நினைவொன்றை கிளர்த்தியது.
அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது
சாலையில் அழகான அம்மா மகளை
இணைந்து நடந்து வருவதை
காண நேரும் போதெல்லாம்
நான்
சொல்வது : "தாயும் சேயும் நலம்"
உடன் இருவரின்
Mental Salute கிடைக்கும்.
என்னுடைய இந்த'தாயும் சேயும் நலம் 'கமெண்ட் கோரிப்பாளையம், ஆரப்பாளையம் பகுதியில் மாணவர்கள் மத்தியில் என்னால் அப்ப பிரபலம்.
04.10.2020 தமிழா தமிழா பார்த்திட்டு இருக்கும் போதே
சம்பந்தமேயில்லாத
ஒரு associate memory
நான் மதுரை அமெரிக்கன் காலேஜ்ல படிக்கறப்ப லேடி டோக், மீனாட்சி காலேஜ், மற்றும் மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்கள்ள ஜீன்ஸ் பேண்ட் போட்ட நாரீமணிங்கள மட்டும் தான் "மாப்ள"ன்னு
கனிவா கூப்புடுவேன்.
"மாப்ள, ஜீன்ஸ் அட்டகாசமா இருக்கே. எங்க எடுத்தீக? Smart and style.
What is your name?"
ஜீன்ஸ் கேர்ள் ’சீறிய’ பதில் : "Idiot.."
உடன் எதிர்வினையாக என் இன்னொரு ’சீரிய’ கேள்வி "What is your Initial?!"
இன்னைக்கும் இப்பவும்
ட்ரென்டியான கமெண்ட்ஸ் தான?
..