Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1851

காலத்தின் அசுர உருவம்

$
0
0

 "பீக் அவர் என்ற உருவில் காலம் நாலு வண்டி ஆட்களை ஒரு வண்டியில் அடைத்து நசுக்கிப் பிழிகிறது" 


1954ல் 'சிவப்பு ரிக் ஷா'கதையில் இதை சொல்லியிருக்கிறார் தி. ஜானகிராமன். 


கரோனா கண்விரித்து பார்த்து

 இந்த நீண்ட அராஜகத்திற்கு 

ஒரு பிரேக் போட்டிருக்கிறது. 


சிட்டி பஸ் ஸ்டாண்டில், அடுத்தடுத்த பஸ் ஸ்டாப்களில் மாலை மறைகிற நேரங்களில் பஸ்சுக்கு நிற்கிற வயதானவர்கள் , நடுத்தர வயதினர், இரு பால் இளையவர்கள் முகங்கள் திகில் பூசி, எப்போதுமே இருந்ததை மறக்க முடியாது. 


தி. ஜானகிராமன் "வீட்டின் அமைதியை நோக்கிப் பறக்கும் மனித வர்க்கத்தின் முக வாட்டத்தையும் அலுப்பையும் வியர்வையையும் பார்க்கும் போது, காலத்தின் இந்த அசுர உருவந்தான் கண் முன் நிற்கிறது." 


'காலத்தின் அசுர உருவம்' - 

அறுபத்தாறு வருடங்களுக்கு முன்பு 

எழுதிய வார்த்தை. 


பீக் அவரில் டவுன் பஸ் ஏறிய பின் துன்பக்கேணியிலே இறங்கி விட்டது போன்ற நிரந்தர அதிர்ச்சி. 


மொஃபசல் பஸ், எக்ஸ்பிரஸ் பஸ் வெளியூர் பயணங்களில் இடையில் நிற்கிற ஊர்களில் இயற்கை அவஸ்தை தீர்க்க, சிறு நீர் கழிப்பிட சூழல், துர்நாற்ற அருவருப்பு.

 மலம் கண்ணில் காணாமல், 

வெளி வந்து மீண்டும் பஸ்ஸுக்குள் நுழைய முடிந்திருக்கிறதா? 


எலக்ட்ரிக் ட்ரெயின் ஏறுகிற, இறங்குகிற பதற்றத்துடன் கூட்ட நெரிசல் துக்கம். 


............. 


"Young man will do it if they come to it "


ஹேம்லெட்டில் ஒஃபீலியா சொல்கிறாள். 

உடலுறவை சொல்கிறாள். 

Young men have sex when opportunity offers. 


'மங்கள விலாசம்'என்ற வார்த்தை

 ஜானகிராமன் கதை 'அன்பு வைத்த பிள்ளை'யில் 


மங்கள விலாசம் - உடலுறவு. 


"அவனுக்கு எப்போது பார்த்தாலும் - கால தேசப் பிரக்ஞையில்லாமல் - மங்கள விலாசத்தில் இருக்க வேண்டும். "


..


Viewing all articles
Browse latest Browse all 1851

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!