ந. முத்துசாமி சார் அந்தக்கால
கூத்துப்பட்டறை நிகழ்வுகளை
மிகுந்த சிரமத்துடன் தான்
ஈடேற்ற முடிந்திருக்கிறது.
க்ரீம்ஸ் ரோடு லலித்கலா அகாதெமியில்
அப்போது செக்ரட்டரி ராஜாராம் கூத்துப்பட்டறைக்கு இடம் கொடுத்திருக்கிறார்.
ஆனால் அங்கேயும் பூசாரியாக ஒருவர்.
சிற்பியும் ஓவியருமான சி.தட்சிணாமூர்த்தி
முகம் சுளித்திருக்கிறார்.
அவருக்கு கூத்துப்பட்டறை ந.முத்துசாமிக்கான இந்த சலுகை
அசூயை ஏற்படுத்தியிருக்கிறது.
”இவங்களுக்கு ஏன் இங்கே இடம் கொடுக்கிறீங்க?” என்று சொல்லி
தடுத்து நிறுத்தி விட்டாராம்.
முத்துசாமி மனத்தை இந்த பூசாரித்தனம்
ரொம்ப புண்படுத்தியிருக்கிறது.
இந்த அவமானத்தை என்னிடம்
அடிக்கடி சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.
நடேஷ் கோபப்பட்டு சொன்ன ஒன்று.
"போஸ் கிருஷ்ணமாச்சாரி Indian Art ஐ ஒழிச்சான். போஸ் கிருஷ்ணமாச்சாரியை
அச்சுதன் கூடலூரும் திட்டுவார்.
டெல்லிக்கு போன
கேரளா ஓவியர்களெல்லாரும் கோடீஸ்வரர்கள்.
ஆனால் தமிழ் ஓவியன் கார் துடைச்சான்.
அதாவது pauper."
https://m.facebook.com/story.php?story_fbid=2925879714292142&id=100006104256328